Nothing: அமெரிக்காவில் இருக்கும் ஒரு விசித்திர நகரம் - இதனை மனிதர்கள் கைவிட காரணம் என்ன? ட்விட்டர்
உலகம்

Nothing: அமெரிக்காவில் இருக்கும் ஒரு விசித்திர நகரம் - இதனை மனிதர்கள் கைவிட காரணம் என்ன?

1977ல் ஒரு முறை தங்க வியாபாரி இந்த நகரத்தை உருவாக்கியதாகவும் இங்கு தங்கம் மற்றும் செப்பு சுரங்கத்தை உருவாக்க நினைத்ததாகவும் கூறப்படுகிறது.

Keerthanaa R

பொதுவாக எங்கே போகிறீர்கள் என்று கேட்டால், ஊட்டி, கொடைக்கானல் என்று சொல்லுவோம். இல்லை வெளிநாட்டுக்கு செல்கிறோம் என்றால் அமெரிக்கா, சிங்கப்பூர் என்று சொல்வோம்.

அடுத்த முறை யாராவது எங்கே ட்ரிப் போகிறீர்கள் என்று கேட்டால், நத்திங் என்று சொல்லுங்கள்.

நத்திங் என்று எப்படி சொல்வது? ஏனென்றால் அது தான் அந்த இடத்தின் பெயர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் மோஹாவ் கௌண்டியில் அமைந்துள்ளது இந்த நத்திங்.

இந்த நகரம் 1977ல் கண்டறியப்பட்டது ஆனால் 2005க்கு பிறகு கைவிடப்பட்டது. இதன் பிறகு இந்த நகரம் பேய் நகரமானது.

இந்த நகரத்தில் அதற்கு முன்னரும் நான்கு பேர் தான் வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது

வெறும் நான்கு மனிதர்கள், ஒரு பெட்ரோல் பங்க் மற்றும் ஒரு பல்பொருள் அங்காடி மட்டுமே இந்த நகரத்தில் பார்க்கமுடியும்.

1977ல் ஒரு முறை தங்க வியாபாரி இந்த நகரத்தை உருவாக்கியதாகவும் இங்கு தங்கம் மற்றும் செப்பு சுரங்கத்தை உருவாக்க நினைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நகரத்தில் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் சுரங்கத்தில் வேலைகளும் நடக்கவில்லை.

இதனால் அங்கு தங்கியிருந்தவர்களும் 80களில் ஊர் மாற்றி சென்றனர். மீதமிருந்தவர்களும் 2005 வாக்கில் ஊரை விட்டு சென்று விட்டனர்.

அங்கு இருந்த கட்டிடங்கள் மட்டுமே தற்போது இருக்கிறது. இந்த அரிசோனா வழியாக செல்பவர்கள் இளைப்பாற, கழிவறை பயன்படுத்த இந்த நத்திங் நகரத்தினை பயன்படுத்துகின்றனர்.

எப்படியும் இந்த நகரத்தை மீட்டெடுத்து விடுவார்கள் என்றும் சிலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?