Norway : It is Illegal to Die in This Town - The Reason is Strange  Twitter
உலகம்

நார்வே: இங்கு இறப்பது சட்டவிரோதமா? அதிசய நகரத்தின் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணம்?

இதனால் இறந்தவர்களை உள்ளூர் மயானங்களில் அடக்கம் செய்வதற்கு கூட உள்ளூர்வாசிகள் அனுமதிக்கவில்லை. இந்த ஊரில் பிறந்து வளர்ந்தாலும் அதே மண்ணில் அடக்கம் செய்ய முடியாது.

Priyadharshini R

நார்வேயின் ஸ்வால்பார்ட் தீவுகளில் லாங்கியர்பைன் என்ற சிறிய நகரம் உள்ளது. இது மரணத்திற்கு தடைசெய்யப்பட்ட ஒரு விசித்திர நகரமாக அறியப்படுகிறது.

இந்த சட்டம் தற்போது போடப்பட்டது அல்ல, பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

1950 முதல் இந்த ஊரில் யாரும் இறக்க அனுமதிக்கப்படவில்லை. யாராவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அவர்கள் நிலப்பரப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

மேலும் அவர்கள் வாழ்வின் மீதமுள்ள காலத்தை அங்கேயே கழிக்க வேண்டும். திடீர் மரணம் ஏற்பட்டால், அந்த ஊரில் அல்லாமல், உடல் வேறு இடத்தில் புதைக்கப்படுகிறது. ஏன் அத்தகைய சட்டம்? ஏன் அடக்கம் செய்யக்கூடாது? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Longyearbyen ஒரு குளிர் நகரம், தொடர்ந்து பனிபொழிந்துக் கொண்டே இருக்கும் இடமாகும்.

இந்த வானிலை காரணமாக இறந்தவர்களின் உடல்கள் அழுகாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் விளைவாக, இறந்த உடலில் இருந்து கொடிய வைரஸ்கள் பரவும் அபாயம் இருந்தது. இது வாழும் மக்களை பாதிக்கலாம் என்ற அச்சம் நிலவியது.

ஆகஸ்ட் 2016 இல், வடக்கு சைபீரியாவில் ஆந்த்ராக்ஸ் என்ற நோய் பரவுவதற்கு முன்னரே ஒரு தொற்று நோய் பரவியது. மேலும் 90 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் இறந்தவர்களிடமிருந்து பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பரவலாம் என்ற அச்சம் இருந்தது.

இதனால் இறந்தவர்களை உள்ளூர் மயானங்களில் அடக்கம் செய்வதற்கு கூட உள்ளூர்வாசிகள் அனுமதிக்கவில்லை. இந்த ஊரில் பிறந்து வளர்ந்தாலும் அதே மண்ணில் அடக்கம் செய்ய முடியாது.

இந்த நகரத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர், தொற்றுநோய் பரவுவது குறித்த அச்சம் பரவலாக உள்ளது.

90 களில் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து அவற்றில் உயிருள்ள வைரஸ்களைக் கண்டறிந்தனர் விஞ்ஞானிகள். இதையடுத்து, அடக்கம் செய்வது நிறுத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணிகளுக்கு கூட குழந்தை பெற்றுக்கொள்ள இங்கு அனுமதி இல்லை. இங்கு மருத்துவமனை இல்லாததால், இங்கிருக்கும் பெண்கள் குழந்தைப் பேற்றுக்காக நார்வேயின் முக்கிய பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

இந்த நகரம் ஸ்வால்பார்ட் தீவுகளில் சுற்றுலா தளமாக உள்ளது. இது பல துருவ கரடிகள் மற்றும் கலை மான்களின் இருப்பிடமாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?