நார்வேயில் இருக்கும் ஒரு நகரத்துக்கு ஹெல் எனப் பெயர் வைத்துள்ளனர். இதனால் இந்த நகரம் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது.
ஹெல் என்ற ஆங்கில வார்த்தை நரகத்தைக் குறிக்கும் என்பது நமக்குத் தெரியும். உலகம் முழுவதும் துரதிஷ்டத்தையும் துர்சம்பவங்களையும் குறிக்க ஹெல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவோம்.
இந்த பெயரை ஏன் ஒரு நகரத்துக்கு வைக்க வேண்டும்? இதன் பின்னால் ஏதேனும் காரணம் இருக்கிறதா எனப் பார்பதற்கு முன்னாள் இந்த நரகத்தில்... மன்னிக்கவும் நகரத்தில் என்ன இருக்கிறது எனக் காணலாம்.
ஹெல் எனப் பெயர் வைத்துள்ளதால் இந்த நகரம் எரிமலைக் குழம்பாக இருக்கும் என எதிர்பார்த்தீர்கள் என்றால் அது தவறானது.
ஏனெனில் நார்வே ஒரு குளிர் பிரதேசம். குளிர்காலத்தில் -25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை சரிவதனால் பாதி ஊரே பனியில் மறைந்துவிடும்.
இந்த நகரத்தில் கிட்டத்தட்ட 1600 பேர் வசிக்கின்றனர். இதன் பெயருக்காகவே இங்கு சுற்றுலாப்பயணிகள் குவிகின்றனர். ஹெல் ரயில் நிலையம், ஹெல் பள்ளி, ஹெல் தெரு உள்ளிட்ட பெயர்பலகைகளுக்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.
இந்த ஹெல் நகரத்தில் சர்ச் கூட இருக்கிறது!
இங்கிருந்து உலக அழகியாக கூட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சரி ஏன் இந்த நகரத்துக்கு ஹெல் எனப் பெயரிட்டுள்ளனர்?
ஹெல் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் நரகம் எனப் பொருள் இருந்தாலும், நவீன நார்வேயன் மொழியில் இதன் பொருள் அதிர்ஷ்டம் (Luck).
இனியாராவது உங்களை "Go to Hell" எனத் திட்டினால் உங்கள் அதிர்ஷ்டத்தைத் தேடி இந்த நகரத்துக்குச் செல்லுங்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust