எலியை பிடித்துக் கொடுத்தால் 1 கோடி சம்பளம் canva
உலகம்

எலியை பிடித்துக் கொடுத்தால் ரூ. 1 கோடி சம்பளம்; பலே ஜாப் ஆஃபரை அறிவித்த மேயர் - எங்கே?

’டைரெக்டர் ஆஃப் ரோடண்ட் மிட்டிகேஷன்’ என்ற வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளார் மேயர். இந்த வேலையில் சேருபவர்களுக்கு 1.3 கோடி ரூபாய் மாத சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது

Keerthanaa R

எலிகளை பிடித்துக்கொடுக்கும் வேலைக்காக ஆள் தேடி வருகிறது நியூயார்க் நகரம். இந்த பணியை ஏற்பவருக்கு மாத சம்பளமாக 170,000 டாலர்கள் வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது இந்திய மதிப்பில் 1.3 கோடி ரூபாய்!

டாம் அண்ட் ஜெரி, ஸ்டுவர்ட் லிட்டில், ரேட்டடூயிலி போன்ற படங்களை பார்த்தால் நமக்கு அடடா, எலிகள் எவ்வளவு க்யூட் என்று தோன்றும்.

ஆனால், நிஜத்தில் எலிகளை வெறுப்பவர்களாகவே மனிதர்கள் இருக்கின்றனர். வீட்டிற்குள் எங்காவது எலிகள் புகுந்துவிட்டால், ரணகளம் தான்.

அப்படி எலித்தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி, அதை எதிர்கொள்ள ஒரு வழியையும் அறிவித்திருக்கிறார் நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ்.

’டைரெக்டர் ஆஃப் ரோடண்ட் மிட்டிகேஷன்’ என்ற வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளார் மேயர். இந்த வேலையில் சேருபவர்களுக்கு 1.3 கோடி ரூபாய் மாத சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த அக்டோபர் 2020லிருந்து நகரத்தில் எலிகளின் எண்ணிக்கை 71 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நியூயார்க் சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

எலிகளை பிடிக்க நகர சுகாதாரத் துறை ஊழியர்கள் பல முயற்சிகளை செய்தும், எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.

இந்த எலிகளின் தொல்லை எல்லைக்கடந்து சென்றுக்கொண்டிருப்பதாகவும், எலிகளுடனான இந்த போர் ஒரு முடிவுக்கு வர மறுக்கிறது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

செல்லபிராணிகளை சீண்டுவது, புறாக்களை தாக்குவது, ‘இரக்கமில்லாமல்’ உணவுகளை நாசம்செய்வது போன்ற செயல்களில் இந்த ‘நான்கு கால் கொறித்துண்ணிகள்’ ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், எலிகளால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதாகவும், மனிதர்களை இவைகள் மரணப்படுக்கைக்கே அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேயர் எரிக் தனது ட்விட்டர் பக்கத்தில், “எலிகளை விட அதிகமாக வேறு எதையும் நான் வெறுக்கவில்லை” என்று பதிவிட்டுள்ளார்

’டைரெக்டர் ஆஃப் ரோடண்ட் மிட்டிகேஷன்’ அல்லது Rat Czar பதவியில் சேர தகுதிகளையும் அறிவித்துள்ளது நகர நிர்வாகம். மிகவும் கோபக்காரராகவும், வஞ்சகம் மற்றும் அதீத தைரியம் படைத்தவராகவும் இருக்கவேண்டும் என்பது நிபந்தனைகள்.

மனதில் உறுதி, திடம் மற்றும் கொலை செய்யும் உள்ளுணர்வு இருப்பவராயின், உங்கள் கனவு வேலை உங்களுக்காக காத்திருக்கிறது என்றும் எரிக் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். Rat Czar நகரத்தின் துணை மேயருக்கு கீழ் இயங்குவார்.

மேயரின் இந்த ரேட் கேட்சர் வேலைக்கான அறிவிப்பு, பலரது கவனத்தை பெற்றுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?