china  Twitter
உலகம்

சீன கடன் வலையில் சிக்கிய பாகிஸ்தான், இலங்கை - எப்படி நடந்தது?

Govind

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கை இரண்டும் பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிடம் பெரும் கடன்களைப் பெற்றுள்ளன. அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்து இப்போது அரசியல் கொந்தளிப்பில் சிக்கியுள்ளன.

சீனாவிடம் மாட்டிக் கொண்ட மியான்மரும் மாலத்தீவும்

மூன்றாவது நாடான மியான்மாரில் 14 மாதங்களுக்கு முன்னர் ஒரு இராணுவ சதிப்புரட்சி நடந்தது. அதன் பிறகு சீனர்கள் அந்நாட்டில் தமது பட்டுவழிச் சாலை திட்டங்களுக்கான பொருளாதார வழித்தடங்கள், துறைமுகங்களுக்கான திட்டங்களை முன்வைத்து கடன் கொடுத்து வருகின்றனர்.

இந்தியப் பெருங்கடலில் இருக்கும் மாலத்தீவும் சீனாவிடம் பெரும் நிதியுதவித் திட்டங்கள், கடன்களை பெற்று தவித்து வருகிறது. இந்த நெருக்கடியால் அங்கே அரசாங்கங்களே மாறி வருகின்றன. மேலும் சீனாவின் கடன் வட்டி குறைவானதல்ல. மற்ற நாடுகள் வசூலிப்பதை விட மூன்று மடங்கு அதிக வட்டியை சீனா வசூலிக்கிறது. அந்த வகையில் அது ஒரு கந்து வட்டி நாடு.

கடனை வைத்து ஒரு நாட்டை அபகரிக்கும் சீனாவின் இந்த அணுகுமுறையை "கடன் பொறி இராஜதந்திரம்" என்று அமெரிக்கர்கள் அழைக்கிறார்கள்.

மியான்மரும் மாலத்தீவும்

மியான்மரும் மாலத்தீவும்சீனாவிடன் உஷாராக இருக்கும் பங்களாதேஷும், நேபாளமும்

நமது அண்டை நாடுகளான பங்களாதேஷும், நேபாளமும் கடன் மற்றும் நிதியுதவித் திட்டங்களை சீனாவிடமிருந்து பெறுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. பங்களாதேஷின் பொருளாதாரம் பாகிஸ்தானை விட பெரியது. பாகிஸ்தான் சீனாவிடமிருந்து வாங்கிய கடன் - நிதித்திட்டங்களில் நான்கில் ஒரு பங்குதான் பங்களாதேஷ் வாங்கியிருக்கிறது.

இந்நாடுகளைத் தவிர இந்தப் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் சீனக் கடனால் பெரும் கொந்தளிப்பில் உள்ளன. கண்முன்னே உள்ள சான்றுகள் இலங்கை மற்றும் பாகிஸ்தான்.

இருப்பினும் எல்லாப் பழியையும் சீனாவின் மீது போடுவது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும். பாகிஸ்தான் மற்றும் இலங்கை இருநாடுகளும் நீண்டகாலமாக பொருளாதாரத்தை தவறாக நிர்வாகம் செய்து வருகின்றன.

இதுதான் முதன்மையான காரணம். இதன் விளைவாக கோவிட் பொது முடக்கம் மற்றும் உக்ரைன் போர் பிரச்சினைகளால் இந்நாடுகள் மேலும் பாதிக்கப்படும் அளவுக்கு தோதாக உள்ளன.

பங்களாதேஷ், நேபாளம்

சீனாவிடம் கையேந்துவதற்கு பாகிஸ்தான் வெட்கப்படவில்லை

பாகிஸ்தான் பொருளாதாரத்தை தவறாக கையாள்வதற்கு சான்று, கடந்த 30 ஆண்டுகளில் அந்நாடு சர்வதேச நிதி நாணயத்திடம் ( IMF) இருந்து 13 கடன்களைப் பெற்றிருக்கிறது.

கடனுக்கான நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றத் தவறியதால் பல கடன்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. கடைசியாக பாகிஸ்தான் பெறுவதாக இருந்த ஐஎம்எஃப் கடன் 6 பில்லியன் டாலர் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது.

சவுதி அரேபியா போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க விரும்பாத நிலையில் பாகிஸ்தான் சீனாவிடம் கையேந்தி நிற்கிறது. சீனாவின் கடன் விதிமுறைகளின் கடுமை அதிகம். ஆனால் அந்த நிபந்தனைகளோடு கடன் பெறுவதற்கு பாகிஸ்தான் வெட்கப்படுவதில்லை.

சமீபத்தில் இம்ரான் கான் சீனாவிடமிருந்து வர்த்தக கடனாக கொடுக்கப்பட்ட 4.2 பில்லியன் டாலரை இரட்டிப்பாக்குமாறு கேட்டார். தற்போது பாகிஸ்தானுக்கு மிக அதிகம் கடன் கொடுக்கும் நாடு சீனாதான்.

பாகிஸ்தான் - சீனா

சீனாவிடம் இலங்கையை சிக்க வைத்த ராஜபக்சே குடும்பம்

இலங்கையின் கதை இன்னும் மோசமானது. அரசுக்கு வருமானம் தரும் வரிகளின் குறைப்பு மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. இதைத் தொடர்ந்து இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு சாத்தியமுள்ள நாடு இல்லை என்று கடன் மதிப்பீட்டு ஏஜென்சிகள் ரேட்டிங்கை மாற்றின.

இலங்கை பட்ஜெட்டின் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% மாக உயர்ந்தது. பின்னர் அந்நியச் செலவாணியின் இருப்பு சரிவு, இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி எல்லாம் சேர்ந்து வெளிநாட்டுக் கடன்களை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஓவர் நைட்டில் இரசாயன உரங்களைத் தடை செய்த ராஜபக்சே குடும்பம் திடீரென நாடு தழுவிய அளவில் இயற்கை விவசாயத்தில் இறங்கினர். இதற்கு இந்தியாவைச் சேர்ந்த இயற்கை விவசாய ஆர்வலர் வந்தனா ஷிவா போன்றோர் ராஜபக்சேக்களை உசுப்பி விட்டிருக்கின்றனர். இறுதியில் என்ன நடந்தது? அறுவடை பேரழிவைச் சந்தத்தது. தற்போது இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய டாலர்கள் இல்லை. உணவு தானியங்கள் இந்தியாவிலிருந்தும், பங்களாதேஷிலிருந்தும் அனுப்பப்படுகின்றன.

ராஜபக்சே

இதில் சீனாவின் பங்கும் பொறுப்பும் என்ன?

சீனா கடன் கொடுப்பதில் கறாரான நாடு. தனக்கு எங்கு ஆதாயம் கிடைக்கும் என்பதை வைத்து அது கடன் கொடுப்பதை திட்டமிடுகிறது. அடிக்கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டால் அது தனக்கு நீண்டகால நோக்கில் ஆதாயம் என்றால் சீனா அதன் பொருட்டு கடன் கொடுக்கிறது.

சீன கடன் கொடுக்கும் நாடுகளில் 70% நல்ல கடன் ரேட்டிங்கை கொண்டிருக்கவில்லை. எனவே சீனா ஒரு நாடு கடன் திருப்பிச் செலுத்த முடியாத போது அந்நாட்டின் சொத்தை, அடிக்கட்டுமானத்தைக் கைப்பற்றுகிறது. இலங்கையும் அப்படித்தான் சீனாவின் கைகளில் வீழ்ந்தது.

எல்லாப் பிரச்சினைக்கும் சீனாதான் காரணமா?

இருப்பினும் சீனாதான் இப்பிரச்சனைகளை உருவாக்கியது என்று சொல்ல முடியாது. எந்த நாடு தவறான பொருளாதார அரசியல் நிர்வாகத்தில் இருக்கிறதோ அந்த நாடுகள்தான் சீனாவோடு கடன் பிரச்சினையில் உள்ளன. மேலும் பாகிஸ்தானின் மின் பற்றாக்குறை போன்றவற்றை சீனாவின் கடன் தீர்த்திருக்கிறது.

ஆனால் நிதி நிர்வாகம், நீண்ட கால நோக்கு இல்லாமல் இப்படி கடன் வாங்கினால் எந்த நாடும் உருப்படியாக வாழமுடியாது. ஒரு நாடு முட்டாள்தனமாக நடந்து கொண்டு துக்ளக் தர்பார் போன்று ஆட்சியை நடத்தி வரும்போது நீங்கள் சீனாவை வில்லனாக சித்தரிக்க முடியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?