பப்புவா நியூ கினியா: 1000 கலாச்சாரங்கள் கொண்ட நாடு - 'பசிபிக் சொர்க்கம்' எனப்படுவது ஏன்? Twitter
உலகம்

பப்புவா நியூ கினியா: 1000 கலாச்சாரங்கள் கொண்ட நாடு - 'பசிபிக் சொர்க்கம்' எனப்படுவது ஏன்?

Antony Ajay R

நியூ கினியா உலகின் வித்தியாசமான நாடுகளில் ஒன்று. இங்கு 850க்கும் மேற்பட்ட மொழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1000க்கும் மேற்பட்ட கலாச்சாரங்களைக் கொண்ட நாடு.

உலகிலேயே அதிக வேற்றுமை நிறைந்த நாடு பப்புவா நியூ கினியா. இந்த நாட்டின் நிலப்பரப்பு சுமார் 462,840 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இதில் 600 தீவுகளும் அடங்கும்.

மக்கள்தொகை சுமார் 70 லட்சம். சராசரியாக 540 சதுர கிலோமீட்டருக்கு ஒரு மொழி இருக்கிறது. 8200 பேருக்கு ஒரு மொழி இருக்கிறது.

சில இடங்களில் 5 கிலோமீட்டர் பரப்பளவில் 2000 மக்கள் மட்டும் தனித்த மொழியைப் பேசுவார்களாம்.

இங்கு மக்கள் தனித்தனி பழங்குடி குழுக்களாக வாழ்வதுதான் இத்தனை மொழி, கலாச்சாரம் இருப்பதற்கான காரணம். இந்த பழங்குடி மக்கள் பல வகைகளில் தங்காளது தனித்துவத்தை வெளிப்படுத்துவர்.

உதாரணமாக பல வண்ணங்களில் தங்கள் முகத்திலும் உடலிலும் சாயம் பூசிக்கொள்வது, வினோதமான உருவங்களை வரைவது, இலை தளை, சங்கு, சோழி ஆகியவற்றைக் கொண்டு அலங்கரித்துக்கொள்வது, வித்தியாசமான சிகை அலங்காரம் செய்வது என சொல்லிக்கொண்டே போகலாம்.

பெரிய நாடாக இல்லாவிட்டாலும் அதாவது மொத்த உலக பரப்பில் 1% இடத்தில் அமைந்திருக்கும் நாடாக இருந்தாலும் உலகின் மொத்த உயிரினங்களில் 5% இங்கு இருக்கின்றன. அந்த அளவு பல்லுயிர்தன்மை கொண்ட நாடு.

pitohui

20,000 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், 800 வகையான பவளம், 600 வகையான மீன்கள் மற்றும் 750 வகையான பறவைகள் இங்கு காணப்படுகின்றன. இன்னும் பப்புவா நியூ கினியாவில் அறியப்படாத இடங்கள் பல இருக்கின்றன.

விஷப்பூச்சிகள், பாம்பு ஏன் மீன்களில் கூட விஷம் இருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பப்புவா நியூகினியாவில் விஷ பறவை கூட இருக்கிறது. பிடோஹுய் என்ற ( pitohui ) பறவையின் இறகுகளில் விஷம் இருக்கும். உள்ளூர் வேட்டைக்காரர்கள் கவனமாக இந்த பறவையை தவிர்த்துவிடுவர்.

Bird of paradise

விஷப்பறவை மட்டுமல்லாமல் அழகான வண்ணமயமான தோகையைக் கொண்ட சொர்க பறவை என்ற பறவையும் பப்புவா நியூ கினியாவில் இருக்கிறது.

பழங்குடி மக்கள் அவர்களுக்குள்ளான சின்ன சின்ன சண்டைகள், கொண்டாட்டங்கள் என கழிந்த பப்புவா நியூகினியாவின் வரலாற்றில் துன்பகரமான நாட்களாக இருந்தது ஐரோப்பியர்கள் மற்றும் ஜப்பானியர்களின் வருகை.

இரண்டாம் உலகப்போரில் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் போரிட்ட கொகோடா பாதை இங்கு புகழ்பெற்றது. இந்த பாதை கடப்பதற்கே மிகவும் ஆபத்தான காட்டு வழியாகும்.

இங்கிருக்கும் கோரல் ரீஃப் என்ற இடம் கடல்வாழ் பல்லுயிர்தன்மை நிறைந்த பகுதியாகும். உலகின் 3வது பெரிய மழைக்காடு இந்த நாட்டில் தான் இருக்கிறது. செபிக் ரிவர் உள்ளிட்ட மக்களின் வாழ்வுடன் கலந்த தடகங்கள், எரிமலைகள் என இந்த நாட்டின் இயற்கையழகு குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் இந்த நாட்டை பசிபிக்கின் சொர்க்கம் என அழைக்கின்றனர்.

பப்புவா நியூ கினியாவுக்கு செல்ல விரும்பினால் அந்த நாட்டின் சுதந்திர தினத்தை தேர்ந்தெடுங்கள். பழங்குடி மக்களின் பலவிதமான கொண்டாட்டங்களுடன் இதுபோன்ற விழாவை வேறெங்கும் நாம் பார்த்திட முடியாது.

இங்குள்ள மக்களுக்கு நவீன கல்வியறிவு குறைவுதான். மருத்துவ வசதிகளும் பெரிதாக இல்லை. குடிசைகளில் தான் வாழ்கின்றனர். ஆனாலும் வறுமை என்பது என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. அந்த அளவும் வளமான நாடு பப்புவா நியூ கினியா.

புவியியல், உயிரியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் பயணத்தை விரும்பும் அனைவரும் பார்வையிட வேண்டிய நாடு பப்புவா நியூ கினியா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?