லுமும்பா Twitter
உலகம்

துண்டுதுண்டாக வெட்டி கொல்லப்பட்ட பிரதமரும், அவரின் தங்கப் பல்-லும் - ஓர் ஆதிக்கத்தின் கதை

NewsSense Editorial Team

ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு நாடு காங்கோ. முன்னர் இந்நாடு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் காலனிய நாடாக இருந்தது. 1961 இல் காங்கோ விடுதலையடைந்து அதன் முதல் பிரதமராக லுமும்பா பதவியேற்றார். ஆனால் ஆட்சியிலிருந்த அவரது அரசாங்கம் மூன்றே மாதத்திற்குள் தூக்கி எறியப்பட்டது. இதே ஆண்டில் லுமும்பா பெல்ஜிய நாட்டின் சதியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முதலில் அவரது உடல் ஒரு ஆழமில்லாத கல்லறையில் அவசர அவசரமாகப் புதைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் அவரைப் போற்றும் காங்கோ மக்களுக்குக் கிடைத்து விட்டால் பிரச்சினை என பெல்ஜிய அதிகாரிகள் கருதினர். எனவே அவரது உடல் அந்தக் கல்லறையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு அமிலத்தில் கரைக்கப்பட்டது.

லுமும்பாவின் அனைத்து உடல் பாகங்களும் கரைந்தாலும் அவரது தங்கப் பல் மட்டும் எஞ்சியிருந்தது. லுமூம்பாவின் உடல் தோண்டி எடுக்கப் பட்டதை மேற்பார்வையிட்ட பெல்ஜிய காவல் துறை அதிகாரி ஜெரார்ட் சூட், லுமும்பாவிடமிருந்து தங்கப் பல் எடுக்கப் பட்டதை ஒப்புக் கொண்டார்.

இதை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென லுமும்பாவின் குடும்பத்தினரும், காங்கோ அரசு மற்றும் மக்களும் நீண்ட காலம் பிரச்சாரம் செய்து முயற்சி மேற்கொண்டனர். அதன் மூலம் பெல்ஜிய அரசுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை அளித்தனர்.

Lumumba

இதன் விளைவாகக் கடந்த திங்களன்று பெல்ஜிய அதிகாரிகள் அந்த தங்கப்பல்லை லுமும்பா குடும்பத்தினரிடம் அளித்தனர். பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஒரு விழாவில் பெல்ஜியம் நாட்டின் அரசு வழக்கறிஞர், லுமும்பாவின் தங்கப் பல்லை ஒரு நீல நிறப் பெட்டியில் வைத்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். அந்தப் பல் காங்கோவிற்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது. காங்கோவில் லுமும்பாவின் அதிகாரப்பூர்வ நினைவு இடத்தில் அது வைக்கப்படும்.

லும்பாவின் கொலைக்கு பெல்ஜியம் நாடே தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்களும், காங்கோ மக்களும் நெடுங்காலம் பிரச்சாரம் செய்தனர்.

பெல்ஜியப் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ திங்களன்று ஆற்றிய உரையில் காங்கோ தேசத்தின் தேசியத் தலைவர் ஒருவரின் எச்சத்தை (தங்கப் பல்லை) பெல்ஜியம் அறுபதாண்டுகளாக வைத்திருப்பது சரியானதல்ல என்று கூறினார். மேலும் லுமும்பாவின் படுகொலைக்கு பெல்ஜியமே தார்மீகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பெல்ஜியப் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ

“லுமும்பாவின் குடும்பத்தினர் முன்னிலையில் பெல்ஜிய அரசாங்கத்தின் மன்னிப்பை முறைப்படி முன் வைக்க விரும்புகிறேன்" என்றும் அவர் கூறினார். லுமும்பா தனது இலட்சியம், நம்பிக்கைகள், கொள்கைகள் காரணமாக படுகொலை செய்யப்பட்டதாக அவர் வருத்தப்பட்டார்.

பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு சதுக்கத்திற்கு லும்பாவின் பெயரைச் சூட்டுவதென பெல்ஜியம் முடிவு செய்திருக்கிறது. மேலும் கொல்லப்பட்ட தலைவரைக் கௌரவிப்பதற்குப் பல முயற்சிகளையும் எடுத்து வைக்கிறது.

இம்மாத தொடக்கத்தில் பெல்ஜியத்தின் மன்னர் பிலிப் தனது நாடு முன்னாள் ஆப்பிரிக்க கானியான காங்கோவில் செய்த அதிகார துஷ்பிரோயகங்களுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்தார்.

தற்போது தமது கொல்லப்பட்ட தலைவரின் தங்கப் பல் கிடைத்ததில் காங்கோ மக்களும், லுமும்பா குடும்பத்தினரும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எந்த ஒரு வல்லரசு நாடும் தனது காலனிய ஆட்சியை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதற்கு லுமும்பாவின் படுகொலை ஒரு சான்று.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?