Pilot Cancels Landing Because Some Passengers Didn't Wear Their Seatbelts Twitter
உலகம்

சீட் பெல்ட் அணியாத பயணிகள் : விமானத்தை தரையிறங்க மறுத்த விமானி - என்ன நடந்தது?

Priyadharshini R

ஒரு விமானம் அதன் இலக்கில் தரையிறங்காதது பயணத்தின் போது பயணிகள் சந்திக்கும் எரிச்சலூட்டும் விஷயங்களில் ஒன்றாகும்.

அப்படி விமானத்தில் இருந்த சில பயணிகள் சீட் பெல்ட் அணிய மறுத்ததால், விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி தரையிறங்குவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பாலியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் விமானம் TR285 அதன் இலக்கை அடைந்ததும், பயணிகள் தரையிறங்குவதற்கு தயாராக இருக்க சீட் பெல்ட்டைக் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டது.

Flight

இருப்பினும், அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை சில பயணிகள் செவிசாய்க்க மறுத்ததாக கூறப்படுகிறது.

கட்டுக்கடங்காத பயணிகள் தரையிறங்கும் நடைமுறைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்ததால், விமானத்தின் பைலட் ஒரு அறிவிப்பை வெளியிடத் தொடங்கினார். அவர் விமானத்தை தரையிறக்கப் போவதில்லை என்று அனைத்து பயணிகளுக்கும் அறிவித்தார்.

மேலும் பயணிகள் சீட் பெல்ட்டைக் அணியவில்லை என்றால், சம்பவம் குறித்து சாங்கி விமான நிலைய துணை காவல்துறைக்கு புகார் அளிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

விமானம் இறுதியாக விமான நிலையத்தில் தரையிறங்கியதும், உள்ளூர் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாகவும், அவர்கள் விமானத்தில் வரவிருப்பதாகவும் பயணிகளுக்குத் தெரிவிக்கும் மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஒரு துணை போலீஸ் குழு பின்னர் விமானத்திற்குள் நுழைந்து விமானத்தின் தரையிறங்கும் செயல்முறையில் குறுக்கிட்ட பயணிகளை அழைத்து சென்றனர்.

போலீசார் அவர்களை விசாரணைக்காக விமான நிலையத்தில் தனியே அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவத்தால், விமானத்தில் இருந்த பயணிகள் 30 நிமிடம் தாமதமாக இறங்க வேண்டியதாயிற்று.

ஒரு அறிக்கையில், ஸ்கூட் ஏர்லைன்ஸ் "தடைகள் மற்றும் சிரமங்களுக்கு" மன்னிப்பு கேட்டது. ஆனால் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வு தங்கள் முன்னுரிமை என்றும், தங்கள் பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் மீது "தகுந்த நடவடிக்கைகள்" எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?