Police Canva
உலகம்

சக காவலரின் ஆண்குறியை கிண்டல் செய்த காவலர் - கைது செய்ய நடவடிக்கையா?

5 நாட்கள் விசாரணைக்குப் பிறகு புதிதாக பணியில் சேர்ந்த ஊழியரிடம் பாலியல் ரீதியிலாக தவறாக நடந்து கொண்டதற்காக ஆடம் ரீட் எவ்வித அறிவிப்பும் இன்றி பணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் தான் செய்தது வழக்கமான பரிகாசமே எனவும் வாதாடினார்.

Antony Ajay R

இங்கிலாந்தில் வில்ட்ஷயர் போலீஸ் ஒருவர் தனது சக காவலரை பாலியல் ரீதியாக அவமானப்படுத்தியதற்காக ஒட்டு மொத்தமாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆடம் ரீட் எனும் காவலர் சக பணியாளரின் ஆண்குறியின் அளவு குறித்து நகைச்சுவை செய்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆடம் ரீட் மீதான குற்றச்சாட்டில் 5 நாட்கள் விசாரணைக்குப் பிறகு, புதிதாக பணியில் சேர்ந்த ஊழியரிடம் பாலியல் ரீதியிலாக தவறாக நடந்து கொண்டதற்காக அவரை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது நீதிமன்றம்.

அந்த விசாரணையின் போது, ரீட் புதிய பணியாளரின் பேன்ட் ஜிப்பைத் திறந்து அவரது உறுப்பைத் தொட்டதாகவும் மற்ற பணியாளர்கள் முன் உறுப்பு சிறிதாக இருந்ததாக கிண்டல் செய்ததாகவும் ஒப்புக் கொண்டார்.

ஆனால் ரீட், தான் செய்தது வழக்கமான பரிகாசமே எனவும் வாதாடினார்.

இந்த சம்பவம் கடந்த நவம்பர் 2021ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட காவலர் புதிதாக சேர்ந்திருக்கிறார். பின்னாளில் அவர் உயரதிகாரியிடம் இது குறித்து தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது உடனடியாக ஆடம் ரீட் பணியிலிருந்து நீக்கப்பட்டார். "இது மாதிரியான மோசமான செயலை எப்போதும் அனுமதிக்க முடியாது. ஆடம் ரீட் இங்கிலாந்தில் எங்கும் காவல்துறைப் பணியில் ஈடுபட அனுமதிக்காது." என நீதிமன்றம் கூறியது.

மற்றொரு காவலரான பால் மில்ஸ், "ரீட்டின் செயல்கள் நியாயமற்றவை. அது பாதிக்கப்பட்ட காவலரின் கண்ணியத்தை அவமதிப்பது. அவருக்கு அதிக மன உளைச்சலைக் கொடுத்திருக்கும்". எனக் கூறியுள்ளார்.

சக மனிதர்களை ஏதோ ஒரு வகையில் அவமானப்படுத்தி, வார்த்தைகளாலோ, செயல்களாலோ கேலி, கிண்டல் செய்து கொடுமைப்படுத்தும் பழக்கம் பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி அனேக இடங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

பணியிடங்களில் உயர் அதிகாரிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் நடைபெற்று தான் வருகிறது. இவை தீவரமாக கண்டிக்கப்பட வேண்டியது அவசியம். அதற்கு எடுத்துக்காட்டக இந்த ஆடம் ரீட் வழக்கு இருக்கிறது.

எனினும் அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?