Diana Twitter
உலகம்

"டயானா மரணம் ஒரு நாடகம் என நினைத்தேன்" - இளவரசர் ஹாரி கருத்தால் பரபரப்பு

"நீண்ட நாட்களுக்கு என் தாயாரான டயானா இறந்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை" என கடந்த ஞாயிறு அன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார் ஹாரி.

Antony Ajay R

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த சச்செக்ஸ் இளவரசர் ஹாரி.

38 வயதாகும் இவர் பல ஆண்டுகளாக அவரது அம்மா டயானா இறக்கவில்லை எனவும் இறந்ததாக மற்றவர்களை நம்பவைக்கிறார் எனவும் அவர் நினைத்து வந்ததாக கூறியுள்ளார் ஹாரி.

"நீண்ட நாட்களுக்கு அவர் இறந்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை" என கடந்த ஞாயிறு அன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார் ஹாரி.

ஹாரியின் தாயாரான டயானா 1997ம் ஆண்டு கார் விபத்தில் மரணித்தார். அப்போது இளவரசர் ஹாரிக்கு 12 வயது மற்றும் வில்லியமுக்கு 15 வயது.

"அம்மா எங்களை விட்டு பிரிவார் என நான் நினைக்கவே இல்லை. மாறாக இது எதாவது திட்டமாக இருக்கும் என்றே எண்ணினேன்" என நெறியாளர் ஆண்டர்சன் கூப்பரிடம் கூறியுள்ளார் இளவரசர் ஹாரி.

மேலும் அவர் என்றாவது ஒருநாள் டயானா திரும்பி வருவார். நம்மை அவருடன் அழைத்துக்கொள்வார் என பதின் பருவம் முழுவதும் நினைத்துக்கொண்டிருந்ததாக கூறியிருக்கிறார்.

சிறுவயதில் நடந்ததை ஏற்றுக்கொள்ளாமல் தன்னையே ஏமாற்றும் விதமாக அப்படி செய்திருக்கலாம் எனவும் ஹாரி தற்போது கூறியிருக்கிறார்.

ஒரு தசாப்தம் கழித்து 23 வயதில் பாரிஸில் டயானாவுக்கு விபத்து நடந்த அதே சுரங்கப் பாதையில் அதே வேகத்தில் காரில் சென்ற பின்னர் தான் தாயார் இறந்ததை ஒப்புக்கொள்வதாக கூறினாராம்.

டயானா இறந்த போது அவரது ஓட்டுநர் போதையில் இருந்ததாக 2006ம் ஆண்டு லண்டன் பெருநகர காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

அந்த 60 நிமிட நேர்காணலில், "இன்றுமே என் தாய் மரணம் பற்றிய அத்தனை புதிர்களும் விலகவில்லை." என ஹாரி கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?