இலங்கையில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்கும் நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
இது ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததைத் தொடர்ந்து மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபர் மாளிகை மற்றும் அலுவலகத்தைக் கைப்பற்றினர். அதன் பிறகு ஜூலை 13ம் தேதி (இன்று) பதவி விலகுவதாக கோத்தபய ராஜபக்சே கூறினார் .
அதன் படி, ராஜபக்சே பதவி விலகவே, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இதற்கு முன்னதாக இலங்கையில் அவசர நிலையைப் பிரகடனப் படுத்தினார் புதிய அதிபர்.
கோத்தபய ராஜபக்சே சபாநாயகரிடம் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக நியமனம் செய்ய வேண்டும் எனக் கூறியதன் அடிப்படையிலேயே இந்த பதவியேற்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்தே நீங்க வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இப்போது அவர் அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது போராட்டக்காரர்களை மேலும் அதிருப்தியடையச் செய்துள்ளது.
ஏற்கெனவே போராட்டக்காரர்களால் ரணில் விக்ரமசிங்கேவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்ரமசிங்கே பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாகவும், கோத்தபய ராஜபக்சேவை கைது செய்யாமல் தப்பிக்க விட்டதாகவும் போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.
இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
இலங்கை அரசு தொலைக்காட்சி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களைப் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர். அரசு தொலைக்காட்சி ஒளிப்பரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக அந்த நாட்டிலும் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust