Queen Elizabeth Twitter
உலகம்

Queen Elizabeth : இங்கிலாந்து ராணியின் இறப்பை முன்கூட்டியே கணித்த மர்ம நபர் - வைரல் ட்வீட்

Priyadharshini R

இங்கிலாந்து ராணியின் இறப்பை முன்கூட்டியே கணித்த டிவிட்டர் பயனரின் பதிவு ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். பிரிட்டன் வரலாற்றில் 70 ஆண்டுகள் ஆட்சி செய்து அதிக காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத் தான்.

1953 ஆம் ஆண்டு முதல் பதவியில் நீடித்து வந்த ராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு அவரின் உயிர் பிரிந்தது.

queen elizabeth

ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.

இந்நிலையில் aidemleoxide என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் “ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8, 2022 அன்று இறக்கிறார்” என்று இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி ஒரு ட்வீட் செய்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் மே 25 ஆம் தேதி பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மார்ச் 17, 2062 அன்று பூமி முழுவதுமாக தீயில் மூழ்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

டிவிட்டர் பதிவை பதிவு செய்தவர் யார் என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் இந்த பதிவில் உள்ளது போன்று செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு ராணி இரண்டாம் எலிசபெத் உயிர் பிரிந்தது. இதனால் இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் இணையத்தில் படுவைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?