கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டினோ ரொனால்டோ தனக்கு தனிப்பட்ட சமையல்காரரை தேடி வருகிறார். இவருக்கு மாதம் 4.5 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கவும் ரொனால்டோ தயாராக இருக்கிறார். இருப்பினும், பணியமர்த்த இதுவரை சரியான ஆள் கிடைக்காமல் தவித்து வருகிறார் விளையாட்டு வீரர்.
கடந்த ஆண்டு நடைப்பெற்ற கால்பந்து உலகக்கோப்பையில் கிறிஸ்டினோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகீஸ் அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமலேயே வெளியேறியது.
இதுவே ரோனால்டோ தன் கிளப்புக்காக விளையாடுவது கடைசியாக இருக்கும் என்பதால் அவர் உலகக்கோப்பையை கைப்பற்றாதது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
ரொனால்டோ இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
உலகக்கோப்பையில் போர்ச்சுகீஸ் அணி விளையாடிய கடைசி போட்டியில் ரொனால்டோ விளையாடவில்லை. இவரை பென்ச்சில் அமர்த்தியது அணி.
போட்டியில் தோற்று வெளியேறவும் செய்தது. கண்ணீர் மல்க மைதானத்தை விட்டு வெளியேறினார் ரொனால்டோ. அதன் பிறகு போர்சுகீஸ் கிளப்பிலிருந்து வெளியேறிய ரொனால்டோ சவுதியின் அல் நசர் கிளப்பில் கடந்த ஜனவரி 1 2023 அன்று, இரண்டு வருட ஒப்பந்தத்தில் இணைந்தார்.
இதற்காக சவுதிக்கு தனது காதலி மற்றும் இவர்களது குழந்தைகளுடன் இடம்பெயர்ந்துள்ளார் ரொனால்டோ. இவர் தற்போது தங்களுக்கென ஒரு செஃபை தேடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன
ரொனால்டோ தற்போது போர்ச்சுகல்லின் குவின்டா டி மரின்ஹாவில் 17 மில்லியன் பவுண்ட் செலவில் ஒரு பிரம்மாண்ட அரண்மனையை எழுப்பி வருகிறார். பணியமர்த்தப்படும் சமையல் கலைஞருக்கு மாதம் 4500 பவுண்ட் சம்பளமாக வழங்க தயாராக இருக்கிறார். இந்திய மதிப்பில் 4.5 லட்சம் ரூபாய்.
ஆனால், வேலையில் சேருபவர் ரொனால்டோ குடும்பத்தின் முழுநேர சமையல்காரராக அவர்களது இந்த நிரந்தர வீட்டில் இருக்கவேண்டும். ரொனால்டோ ஓய்வு பெற்ற பிறகும் குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். போர்ச்சுகீஸ் உணவு வகைகள் மற்றும் இதர நாட்டின் உணவு வகைகளையும் இந்த செஃப் அவர்களுக்கு தயாரித்துக் கொடுக்கவேண்டும்
இப்படிப்பட்ட கடுமையான நிபந்தனைகள் போடப்பட்டுள்ளதால், இன்னும் அவருக்கு ஆள் கிடைக்கவில்லை. ஒரு தலைச்சிறந்த செஃபை தேடி வருகிறார் ரொனால்டோ!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust