கீவ் நகரில் உக்ரைன் இராணுவம்

 

Twitter

உலகம்

தப்பிச் செல்ல மறுத்த உக்ரைன் அதிபர், அகதிகளாக மக்கள் - உக்ரைன் நிலவரம்

முன்னதாக ருமேனியா அருகில் பாம்புத்தீவில் ரஷ்ய வீரர்களுக்கு அஞ்சாமல் "Go and F**k your self" என திமிராக கூறி உக்ரைன் வீரர்கள் வீரமரணமடைந்தது குறிப்பிடதக்கது.

Antony Ajay R

தெருக்களில் தாக்குதல்

உக்ரைனின் தலைநகரான கீவ் நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யப் படைகள். தெருக்களில் ஊரடங்கு பேணப்பட்டு சண்டை நடைபெற்று வருவதனால் வீட்டு வாசல்கள் மற்றும் ஜன்னல்களுக்குக் கூட யாரும் வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

கீவ் நகருக்குள் நுழைவதற்கு இருக்கும் அத்தனை வழிகளையும் அடைத்து ராணுவம் ரஷ்யப்படைகளைக் கட்டுப்படுத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கீவ் நகரில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Vlodymyr Zelenski

"தப்பிச் செல்ல விரும்பவில்லை"

இதற்கு இடையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியிடம் "நீங்கள் கீவிலிருந்து தப்பிக்க உதவுகிறோம்" என அமெரிக்கா கூறியதை ஏற்க மறுத்த உக்ரைன் அதிபர், "எங்களுக்கு ஆயுதங்களும் படைகளும் தான் தேவை, தப்பிச் செல்ல விரும்பவில்லை" எனப் பதிலளித்துள்ளார்.

முன்னதாக ருமேனியா அருகில் பாம்புத்தீவில் ரஷ்ய வீரர்களுக்கு அஞ்சாமல் "Go and F**k your self" எனத் திமிராகக் கூறி உக்ரைன் வீரர்கள் வீரமரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிற்கு இழப்பு

இதுவரை 3,500க்கும் மேற்பட்ட ரஷ்யப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக, யுக்ரேன் ராணுவம் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதில், இந்த படையெடுப்பில் ஈடுபட்ட 3,500க்கும் மேற்பட்ட ரஷ்யப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 14 விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 102 டேங்குகள் ஆகியவற்றையும் ரஷ்யா இழந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் குறித்து ரஷ்யா இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை

உக்ரைனிலும் 1000த்திற்கும் மேற்பட்டோர் மரணித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

உணவுப் பொருட்களுடன் காத்திருக்கும் ருமேனியா மக்கள்

அகதிகளாக உக்ரைன் மக்கள்

உக்ரைன் மக்கள் பாதுகாப்பாகப் பதுங்கு குழிகள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கான உணவு மற்றும் பிற தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினமானதாக இருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களும் அதில் அடக்கம்.

உக்ரைனிலிருந்து அகதிகளாக 50லட்சம் மக்கள் வரை வெளியேறுவார்கள் என்று ஐ.நா கணித்திருக்கிறது. எல்லை நாடான ருமேனியாவில் உள்ள மக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களை வரவேற்க எல்லையில் தண்ணீர் மற்றும் உணவுடன் காத்திருக்கின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?