Vladimir Putin

 

Twitter

உலகம்

உக்ரைன் மீதான ரசிய ஆக்கிரமிப்பு துவங்கியது : மூன்றாம் உலகப் போர் வர வாய்ப்புள்ளதா ?

மூன்று பகுதிகளிலும் சுற்றி வளைத்தது. மேலும் ரசிய பாராளுமன்றம் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ்க் பகுதியை தனிநாடாக அங்கீகரித்து, அங்கே ரசிய துருப்புகளை அனுப்ப அங்கீகாரமும் அளித்திருக்கிறது.

Newsensetn

உக்ரைன் மீதான ரசிய படையெடுப்பு துவங்கியிருக்கிறது. அதன் பின்னணி என்ன? சுருக்கமாக பார்ப்போம்.

1991 இல் சோவியத் யூனியன் சரிந்த பின்னர் அதன் அங்கமாக இருந்த உக்ரைன் ஒரு தனிநாடாக பிரிந்தது. ஆனால் அது பூகோள ரீதியில் முக்கியமான இடத்தில் இருந்தது. மேற்கு எல்லையில் அமெரிக்க தலைமையிலான நேட்டோ இராணுவத் தளங்களைக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் இருக்க கிழக்கு, தெற்கே ரசியாவும் துறைமுகங்களும் கொண்ட நாடாக உக்ரைன் மாறுகிறது.

Natural Gas

ஐரோப்பாவிற்கு ரசிய இயற்கை எரிவாயு தேவை

இந்த மேற்கு கிழக்கு பிரிவுகள் ஒருபுறமிருக்க உக்ரைன் மக்களும் அதற்கேற்றவாறு பிரிந்துள்ளனர். மேற்கு உக்ரைன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாகவும், கிழக்கு உக்ரைன் மக்கள் ரசியாவிற்கு ஆதரவாகும் பிரிந்துள்ளனர்.

ஐரோப்பாவிற்கு ரசிய இயற்கை எரிவாயு தேவை. ரசியாவிலிருந்து நார்ட் ஸ்ட்ரீம் 1 எனப்படும் இயற்கை எரிவாயுக் குழாய்கள் பால்டிக் கடல் வழியாக ஜெர்மனிக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பியா நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்தக் குழாய் விநியோகத்தில் உக்ரைனைப் புறக்கணிக்க ரசியா முயற்சிக்கிறது. இந்த குழாய் விநியோகம் உக்ரேன் வழியாகச் செல்லாவிட்டால் உக்ரேனுக்கு ராயல்டி தொகைத் தரத்தேவையில்லை. இது உக்ரைன் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும்.

Russian army in Ukraine border

உக்ரைன் எல்லையில் ரசியா படைகளை குவித்தது

2014 ஆம் ஆண்டில் உக்ரைன் அமெரிக்க தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிலிருந்து விலகியது. அப்போது உக்ரைன் அதிபராக இருந்தவர் ரசிய ஆதரவாளர். இதனால் உக்ரைனில் உள்நாட்டுக் கலகம் வெடித்தது. உக்ரைன் அதிபர் ரசியாவிற்கு தப்பிச் சென்றார்.

பால்டிக் கடலின் வடக்கு பகுதியில் இருக்கும் தீபகற்பம் கிரிமியா. இங்கே கணிசமான அளவில் ரசிய மக்களும், ஓரளவிற்கு உக்ரைன் மற்றும் இதர மக்களும் வாழ்கிறார்கள். ரசியாவிற்கு கிரிமியாவில் இருக்கும் துறைமுகம் தேவைப்பட்டதால் கிரிமியாவைக் கைப்பற்றுகிறது. இது அமெரிக்காவிறகும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கோபத்தை ஏற்படுத்தினாலும் பெரிதாக எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை.

பிறகு ரசியா கிழக்கு உக்ரைனில் இருக்கும் டான்பாஸ்க், செசஸ்ட்ஸ் போன்ற பகுதிகளை உக்ரைனில் இருந்து பிரிக்கிறது. தற்போது அவற்றை அங்கீகரித்தும் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை இதை சட்டவிரோதம் என அறிவிக்கிறது.

அடுத்ததாக ரசியா நேர்ட் ஸ்ட்ரீம் 2 எனும் இரண்டாவது இயற்கை எரிவாயு குழாயிலிருந்து அனுப்பும் வாயுவை இரட்டிப்பாக்குகிறது. இது ரசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு சென்றாலும் உக்ரேனை இது மேலும் பொருளாதார ரீதியாக முடக்கும்.

இந்நிலையில் உக்ரைன் எல்லையில் ரசியா படைகளை குவித்தது.

Ukraine Border

ரசிய துருப்புகள் உக்ரைன் நாட்டிற்குள் நுழையத் துவங்குகின்றன

மூன்று பகுதிகளிலும் சுற்றி வளைத்தது. மேலும் ரசிய பாராளுமன்றம் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ்க் பகுதியை தனிநாடாக அங்கீகரித்து, அங்கே ரசிய துருப்புகளை அனுப்ப அங்கீகாரமும் அளித்திருக்கிறது.

ரசிய துருப்புகள் உக்ரைன் நாட்டிற்குள் நுழையத் துவங்குகின்றன. உடனே அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது. ஜெர்மனி நோர்ட் ஸ்ட்ரீம் 2 எனும் ரசியாவின் இயற்கை எரிவாயுக் குழாய் சப்ளையை நிறுத்தி விடுகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் நார்வே போன்ற நாடுகளிலிருந்து இதே எரிவாயுவைப் பெற முடியும். இப்படிச் செய்தால் ரசியா பின்வாங்கிவிடும்.

உக்ரைன் பிரச்சினை என்பது ரசிய அதிபர் புடினின் சமீபத்திய சதுரங்க ஆட்டத்தின் ஒரு நகர்வு மட்டுமே.

Third World War

மூன்றாம் உலகப்போர்

மூன்றாம் உலகப்போர் வராது என்று முற்றிலும் அச்சமில்லாமல் இருக்க முடியாது. ஏனெனில் ரசியாவை சீனா ஆதரிப்பதால் ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானமாக ஒரு முடிவை எடுக்க முடியாது. ரசியாவின் தீவிர அணுகுமுறையால் சீனா தனது நலனுக்காக தைவான், தென்சீனக் கடல், இந்தியாவிற்கு எதிராக தைரியமாக நடவடிக்கை எடுக்கும்.

இப்படி நடக்கக்கூடாது என்றுதான் உண்மையிலேயே நாம் நம்புகிறோம். பாலின்ட்ரோம் என்பது அரிதாக தேதி மாதம் வருடம் ஒரே எண்ணில் வருவதைக் குறிக்கும். ரசியாவின் இந்த நடவடிக்கை அதே போன்றோதொரு பாலின்ட்ரோம் படி 22.2.2022 அன்று நடந்திருக்கிறது. ஆனால் இந்த எண்கள் ஒன்றிணைவதைக் காட்டிலும் நடக்கப் போவது நமது கவலைக்குறியது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?