Catherine The Great Twitter
உலகம்

விலங்குகளுடனான பாலுறவு மரணத்திற்கு காரணமா? ரஷ்ய ராணி கேத்தரின் எப்படி இறந்தார்?

Priyadharshini R

தனது நரம்புகளுக்குள் ஒரு துளி ரஷ்ய இரத்தம் இல்லாமல் ஜெர்மனியில் பிறந்த சோஃபி ஃப்ரீடெரிக் அகஸ்டே, ரஷ்யாவின் கேத்தரின் தி கிரேட் என்ற பெயருடன் இறந்தார்.

அவரது வெற்றிகரமான 34 ஆண்டுகால ஆட்சி 'ரஷ்யாவின் பொற்காலம்' என்று அறியப்பட்டது. தத்தெடுத்த தாயகமான ரஷ்ய சாம்ராஜ்யத்தை கணிசமாக மேம்படுத்தினார். அதன் எல்லைகளை விரிவுபடுத்தி, உலக வல்லரசாக மாற்றிய வரலாற்றின் தலைசிறந்த பெண் ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.

1762 முதல் 1796 வரை ரஷ்யாவின் பேரரசியாக இருந்தார். அவரது கணவர் பீட்டர் III தூக்கியெறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் அதிகாரத்தை கையில் எடுத்தார்.

அவரது நீண்ட ஆட்சியின் கீழ், அறிவொளியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, ரஷ்யா கலாச்சார மறுமலர்ச்சியை பெற்றது. இது பல புதிய நகரங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் திரையரங்குகளை நிறுவ வழிவகுத்தது

ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலிருந்து பெரிய அளவிலான குடியேற்றம் இங்கு நடக்க பெரிய காரணமாக இருந்தது. இவர் நீதித்துறை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். ஒரு பரந்த கலை சேகரிப்பை உருவாக்கினார், இது உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றின் அடித்தளத்தை உருவாக்கியது.

என்ன தான் அவர் பல சாதனைகளை புரிந்திருந்தாலும், கேத்தரின் மீது அவதூறான வதந்திகளுக்காக அடிக்கடி நினைவுகூரப்பட்டார்.

அதுவும் அவரது மரணத்தை சுற்றி ஏகப்பட்ட கதைகள் உள்ளன. அதில் ஒன்று குதிரையுடன் பாலுறவு

கேத்தரின் குதிரையுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். ஒரு நாள் மாலையில் அதனுடன் கேத்திரின் உடலுறவு கொள்ள முயன்றபோது, ​​குதிரை அவர் மேல் மோதியதில் அவர் இறந்து போனார் என்ற கதையை தான் இன்றும் பலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மையில் கேத்தரின் தி கிரேட் பக்கவாதத்தால் இறந்தார். அவர் தனது கழிப்பறை தரையில் சரிந்து விழுந்து கோமாவிற்கு சென்று படுக்கையில் படுத்திருந்தபோது இறந்தார் என்றும் கூறப்படுகிறது.

ரஷ்யாவை நீண்ட காலம் ஆட்சி செய்த ஒரு பெண்ணைச் சுற்றி, இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இது போன்ற வதந்திகள் ஏன் சூழ்ந்தது?

கேத்தரின் வாழ்ந்த அல்லது ஆட்சி செய்த காலம் ஆண் ஆதிக்கம் தலைதூக்கி இருந்த காலம். பெண்கள் ஆண்களை விட தாழ்ந்தவர்கள், கணவனுக்கு அடிபணிய வேண்டும் என்பது அந்தக் காலத்தின் நம்பிக்கை. அவர்களால் ஒரு தேசத்தை, குறிப்பாக ஒரு நாட்டை வெற்றிகரமாக ஆள முடியும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருந்தது.

அவர்களின் பார்வையில், கேத்தரின் அதற்கெல்லாம் அப்பாற்பட்டு இருந்தார். கேத்தரினை எதிர்த்த ஆண்கள் அவருடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கேத்திரின் குறித்து அவதூறு பரப்பினர்.

வெளிநாட்டு பத்திரிகைகளால் வரையப்பட்ட கார்ட்டூன்கள் அவரை மிக மோசமாக காட்சிப்படுத்தியது. தொடர்ந்து கேத்தரினை இழிவுபடுத்தியது, குதிரை கட்டுகதை, கேத்தரின் அரியணை ஏறுவதை தடுக்க அவரின் எதிரிகள் இவ்வாறு சித்தரிக்கின்றனர் என்று வரலாற்றாசிரியர்கள் வாதிட்டனர்.

உண்மையில் குதிரைகளை விரும்பிய கேத்தரின்

கேத்தரின் குதிரைகளை விரும்பினார். குதிரையின் மீது ஒரு உருவப்படம் வரையப்பட்டது. கேத்தரின் பாலியல் ரதியாக சுதந்திரமானவர் என்பதும், அவரது ஆட்சியின் போது பல ஆண் காதலர்களை அழைத்துச் சென்றதும் அந்த படத்தில் ஆவணப்படுத்தப்பட்டது.

அவர்களில் சிலர் அவரை விட இளையவர்கள். அவர் தனது அரசியல் அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் உடலுறவை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். அதே வேளையில், அவர் நிம்போமேனியாக்களிலிருந்து (nymphomaniac) வெகு தொலைவில் இருந்தார்.

குதிரையுடன் உடலுறவு கொள்ள முயன்றுபோது ஒரு ராணி இறந்தார் என்ற கட்டுகதையை மட்டுமே வரலாறு நினைவில் வைத்திருக்கும். அந்த வதந்தி இன்றுவரை தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஆனால் உண்மையில் கேத்தரின் தி கிரேட் பக்கவாதத்தால் இறந்தார். அவர் தனது கழிப்பறை தரையில் சரிந்து விழுந்து கோமாவிற்கு சென்று படுக்கையில் படுத்திருந்தபோது இறந்தார் என்ற தகவல்களை தான் வரலாறு கூறுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?