Putin NewsSense
உலகம்

உக்ரைன் ரஷ்யா : பிரமாண்ட கப்பலை தாக்கியதா Ukraine? கோபமான Russia - தீவிரமடையும் போர்

NewsSense Editorial Team

ரஷ்யாவின் பெருமைமிக்க போர் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து பின் கடலில் மூழ்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த போர்க் கப்பலைத் தாக்கியது தாங்கள்தான் என்கிறது உக்ரைன்.

தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கப்பலை துறை முகத்தை நோக்கி இழுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அது மூழ்கியதாக ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட அந்த போர்க் கப்பலின் பெயர் மாஸ்க்வா. கப்பலில் தீப்பிடித்தபோது 510 பேர் வரை இருந்ததாகவும் அதன்பின் அவர்கள் மற்றொரு கப்பலுக்கு அனுப்பப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

மாஸ்க்வா போர் கப்பல் கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய கப்பற்படையின் தலைமை கப்பல் ஆகும்.

இந்த சம்பவத்தில் உக்ரைன் தரப்பு கூற்றையோ அல்லது ரஷ்ய தரப்பு கூற்றையோ எந்த ஊடகமும் சுயாதீனமாக பரிசோதித்ததாகத் தெரியவில்லை.

அதேபோல இந்த கப்பல் உக்ரைனின் ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுவதற்கான போதிய தகவல்கள் தங்களிடம் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் எது நடந்ததோ அது ரஷ்யாவுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த கப்பலை தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட நெப்ட்யூன் ஏவுகணையை கொண்டு தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

மாஸ்க்வா

ரஷ்யாவின் பெருமை மாஸ்க்வா

மாஸ்க்வோ கப்பலின் அழிவு ரஷ்ய அதிபர் புதினுக்கு ஒரு பலத்த அடிதான். உக்ரைனில் தான் தொடங்கிய ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடி சரியாக சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லிக் கொள்ளும் புதினுக்கு இது ஒரு அவமானகரமான இழப்பும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த கப்பல் குறித்து பெரிதும் பேசாத ரஷ்ய ஊடகங்கள், அதிகாரிகள் என்ன சொன்னார்களோ அதை மட்டுமே முன்மொழிந்தன.

இந்த கப்பலில் தீ ஏற்பட்டதாகவும் அதில் வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் வெடித்ததாலும் கப்பல் நீரில் மூழ்கியதாக ரஷ்யா தெரிவித்தது.

ஒரு காலத்தில் நாட்டின் பெருமைக்கான சின்னமாக விளங்கிய மாஸ்க்வோ இன்று நீருக்கு அடியில் என்பது ரஷ்யாவுக்கு ஏற்பட்ட பேரிழப்பு.

கருங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களில் மாஸ்க்வோவில் மட்டுமே தொலைதூர வான் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் உள்ளது.

Russia - ukraine war

கப்பலின் அழிவு போரின் பாதையை மாற்றுமா?

மாஸ்க்வோ கப்பலில் இருந்து உக்ரைனில் ஏவுகணைகள் ஏவப்படவில்லை என்றாலும், அவ்வாறு ஏவுகணையை செலுத்திய கப்பலுக்கு துணையாக பயன்படுத்தப்பட்டது மாஸ்க்வோ.

ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசியிருந்த பெயர் வெளியிடாத அமெரிக்க அதிகாரி ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில், இந்த கப்பலின் அழிவு ரஷ்ய கடற்படையின் நீண்டகால திறன் குறித்த கேள்விகளை எழுப்பலாம் ஆனால் தற்போது நடைபெறும் போரில் கப்பற்படை பெரிதாக எந்த பணியையும் ஆற்றவில்லை என்பதால் இது போரின் பாதையை மாற்றாது என தெரிவித்துள்ளார்.

அதேபோல தற்போதைய ரஷ்ய கப்பற்படையின் செயல்பாட்டில் நிச்சயமாக மாற்றம் நிகழலாம்.

க்ரைமியாவை கைப்பற்றிய பிறகு கருங்கடலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது ரஷ்யா. அந்த ஆதிக்கத்தின் அடிநாதமான தலைமை போர்க்கப்பலைதான் தற்போது இழந்துள்ளது.

சோவியத் கால கப்பல்

பனிப்போரின் போது அமெரிக்காவின் விமானங்களை அழிக்க இந்த கப்பல் உருவாக்கப்பட்டது. 1980ல் இருந்து 40 வருடங்களாக கப்பற்படையில் சேவையில் இருந்து வந்த இந்த கப்பல் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு 2021ஆம் அண்டு மீண்டும் பணிக்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இது முழுமையாக நவீன அமைப்புகள் கொண்ட கப்பல் என்று சொல்ல முடியாது.

இதற்கு முன்பு இந்த கப்பல் சிரியா போரில் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டது. அங்கு ரஷ்ய கப்பற்படைக்கு அரணாக இருந்தது மாஸ்க்வோதான்.

ரஷ்ய – உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து மாஸ்க்வோவையும் சேர்த்து ரஷ்யா இதுவரை இரு பெரும் கப்பல்களை இழந்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?