சலாலா : 3 மாதம் மட்டும் மழைக்காடாக மாறும் பாலைவனம் - ஓமன் அதிசய காடு பற்றி தெரியுமா? Canva / Salalah Kareef
உலகம்

சலாலா : 3 மாதம் மட்டும் மழைக்காடாக மாறும் பாலைவனம் - ஓமன் அதிசய காடு பற்றி தெரியுமா?

மத்திய கிழக்கு நாடுகள் பெரும்பாலும் பாலைவனம் சூழ்ந்தவை என்பது நமக்குத் தெரியும். ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது போல ஓமனில் உள்ள ஒரு பகுதி பாலைவனம் மட்டும் திடீரென பசுமையான மழைக்காடாக மாறிவிடுகிறது. இந்த மர்ம நிலம் பற்றி விரிவாகக் காணலாம்.

Antony Ajay R

ஒரு ஆண்டுக்கு 3 மாதம் மட்டும் பாலைவனம் மழைக்காடாக மாறுமென்றால் நம்ப முடிகிறதா? ஓமன் நாட்டில் இந்த அதிசயம் நடக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகள் பெரும்பாலும் பாலைவனம் சூழ்ந்தவை என்பது நமக்குத் தெரியும். ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது போல ஓமனில் உள்ள ஒரு பகுதி பாலைவனம் மட்டும் திடீரென பசுமையான மழைக்காடாக மாறிவிடுகிறது.

அங்கு ஏரிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உருவாகின்றன. 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலைக் குறைகிறது. இந்த நிகழ்வை "சலாலா கரீஃப்" (Salalah Khareef) அல்லது சலாலா பருவமழை என்று அழைக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் பருவமழையால் இந்த நிகழ்வு நடக்கிறது. இங்கிருந்து 50 கிலோமீட்டர் கடந்து சென்றால் மழை இல்லாமல் பாலைவனம் 50 டிகிரி செல்சியஸில் சுட்டெரிக்கும். இந்த இரண்டு பகுதிகளும் ஒரே நாட்டில் இருக்கிறது என்பதையே சுற்றுலாப்பயணிகள் நம்ப மறுப்பர்.

மழைக்காடு என்றால் சும்மா இல்லை. மரங்கள் புல்வெளிகள் எல்லாமும் உருவாகிவிடும். ஒட்டகங்களுக்கு இங்கு உருவாகும் நீர்நிலைகள் சொர்க்கம் போல இருக்கும். அத்துடன் இங்கு நல்ல பனியும் சூழ்ந்துவிடும். சில நேரங்களில் நமக்கு 3 அடி முன்னிருக்கும் பொருளைக் கூட நாம் பார்க்க முடியாதபடி இருக்கும் என்கின்றனர்.



ஒட்டகங்கள் மட்டுமல்லாமல் பல பூச்சிகள், பாம்புகள், சிலந்திகள் மற்றும் பாலூட்டிகளுக்கு இது வீடாக திகழ்கிறது. குறிப்பாக அழிவின் விழிம்பில் இருக்கும் அரேபிய சிறுத்தைகளுக்கு இது கடைசி புகலிடமாக இருக்கிறது.

கடற்கரையை ஒட்டி இருக்கும் இந்த மழைக்காடு கடலோரமாக 250 கிலோமீட்டர் வரை நீண்டிருக்கிறது. கடற்கரையில் இருந்து 5 முதல் 10 கிலோமீட்டர் வரை அகலமான நிலப்பரப்புகளைக் கொண்டிருக்கிறது.

அதிக பட்சமாக இந்த காடு கடற்கரையில் இருந்து 30 கிலோமீட்டர் விலகியிருக்கிறது. ஓமனில் நிரந்தரமான ஆறோ, ஏரியோ கிடையாது. பருவ மழையால் இந்தப் பகுதியில் மட்டும் நீர்வீழ்ச்சிகள் தோன்றும். வாடி டார்பட் என்பது புகழ்பெற்ற ஏரி ஆகும்.

Wadi Darbat



சலாலா பகுதியில் ஜிப்பாலி என்ற மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தான் சலாலாவின் பூர்வகுடிகள்.

இந்த பூர்வக்குடி மக்கள் தங்களது வாழ்வாதாரத்துக்கு இங்கு வளரும் அனோஜெய்சஸ் என்ற மரத்தைத்தான் பெருமளவில் நம்பியிருக்கின்றனர்.

இந்த மரம் இவர்களுக்கு விறகு எரிக்கவும், பொருட்கள் செய்யவும் ஏன் மூலிகை மருந்தாக கூட பயன்படுகிறது. சலாலாவில் தான் புகழ்பெற்ற சாம்பிராணி மரங்களும் அதிகமாகக் காணப்படுகிறது.



சலாலா பகுதியில் அதிகமாக ஒட்டகங்கள் மற்றும் பசுக்கள் மேய்வதனால் காட்டின் சிலப் பகுதிகள் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கின்றன.

உலகிலேயே ஆண்டில் 9 மாதங்கள் வறண்ட பாலைநிலமாகவும் 3 மாதங்கள் மட்டும் ஈரப்பதம் நிறைந்த பனி சூழ்ந்த பசுமையான வெப்பமண்டல காடாகவும் இருக்கும் இடம் வேறெங்கும் இல்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?