பூனையை பணியமர்த்திய அமெரிக்க விமான நிலையம் - நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் என்ன? Twitter
உலகம்

பூனையை பணியமர்த்திய அமெரிக்க விமான நிலையம் - நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் என்ன?

Keerthanaa R

உலகில் அதிகம் விரும்பப்படும் செல்லப் பிராணிகளில் நாய்க்கு அடுத்தபடியாக இருக்கிறது பூனைகள்.

சற்றே கர்வத்துடனும், நளினத்துடனும், அதிகமாக சேட்டைகள் செய்யும் விலங்கான இந்த பூனையை வெறுப்பவர்கள் குறைவே.

செல்ல பிராணிகள் நம் கவலைகளை போக்கிக்கொள்ள ஒரு சிறந்த தீர்வாக இருக்கின்றன. இதனால் இந்த பிராணிகளை தெரப்பிக்களுக்கு பரவலாக பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக விமான பயணங்களை கண்டால் அஞ்சும் நபர்களுக்கு அவர்கள் மன நிலையை நிதானப்படுத்தி, கவலையை போக்கி பயணத்தை பயமற்றதாக மாற்ற இந்த விலங்குகள் உதவுகின்றன. இவர்களை wag Brigade என்று அழைக்கின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையமானது, ஒரு பூனையை தங்கள் குழுவில் சேர்த்திருக்கிறது. அந்த பூனையின் பெயர் டியூக் எல்லிங்டன் மோரிஸ்.

பயணத்திற்கு தயாராக இருக்கும் பயணிகளில் யாருக்காவது கவலை ஏற்பட்டால் (anxiety) அவர்கள் டியூக் பூனையை கையில் எடுத்து செல்லம் கொஞ்சி விளையாடலாம்.

டியூக் பூனையை பணியமர்த்தியதை குறித்து ட்விட்டரில் அறிவித்திருந்தது விமான நிலைய நிர்வாகம்

அந்த பதிவில், ” டியூக் எல்லிங்டன் மோரிஸ், எங்களின் புதிய வாக் ப்ரிகேடை வரவேற்கிறோம்” என்று பதிவிட்டு விமானப்படை உடையில் அந்த பூனை இருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தனர்.

இணையவாசிகள் பலரும் அந்த பூனைக்கு வாழ்த்து கூறி, தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?