முகமது நபிகள் விவகாரம் : செளதி அரேபியா கூறுயது என்ன?  NewsSense
உலகம்

முகமது நபிகள் விவகாரம் : செளதி அரேபியா கூறியது என்ன? - Latest Update

NewsSense Editorial Team

இந்தியாவை ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சில மூத்த நிர்வாகிகள், இஸ்லாம் மதத்தின் இறைத்தூதர் முகமது நபிகளைக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசிய விவகாரம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அது குறித்த முழு விவரங்களைப் படிக்க இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்:

https://www.newssensetn.com/india/bjp-leader-insults-prophet-mohammad

கத்தார், குவைத், இரான் ஆகிய இஸ்லாமிய நாடுகள், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளின் கருத்தை கடுமையாகக் கண்டித்தன, பல்வேறு அரசியல் ரீதியிலான அழுத்தங்களையும் இந்தியாவுக்குக் கொடுத்தன.

அந்த வரிசையில் தற்போது இந்தியாவின் மிக முக்கிய ராஜ்ஜிய கூட்டாளியான செளதி அரேபியாவும் சேர்ந்திருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளில் ஒருவரான நுபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் இக்கருத்துகள் நபிகளை அவமதிப்பதாக இருக்கிறது என செளதி கூறியுள்ளது. மேலும் இந்தியா பலதரப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் மதங்களை மதிக்க வேண்டும் என்றும் அழைப்புவிடுத்துள்ளது அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம்.

Nupur Sharma

இந்தியா பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கத்தார் கூறியுள்ளதை மேலே குறிப்பிட்ட செய்தியில் பார்த்தோம்.

தற்போது குவைத் நாடும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியின் கருத்துக்கு இந்தியா பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மேலும் இது போன்ற மோசமான கருத்துகள் பேசப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

செளதி அரேபியாவில் ஜெடா நகரத்தில் உள்ள Organisation of Islamic Cooperation (OIC) என்றழைக்கப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும், பாஜக நிர்வாகியின் கருத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

குவைத், கத்தார், செளதி அரேபியா, பஹரைன், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு உலகத்தின் முக்கிய நாடுகளோடு இந்தியாவுக்கு ராஜ்ஜிய ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் ஒருவிதத்தில் பலமான உறவு இருந்து வருகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் வியாபாரத்தில், இதே அரபு உலக நாடுகளிடமிருந்து தான் கணிசமான அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருவது நினைவுகூறத்தக்கது.

PM Modi in Saudi

கடந்த 2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு அரபு உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டுடனான உறவுகளை மேம்படுத்தி வருகிறார் அல்லது குறைந்தபட்சம் அந்நாடுகளுடனான உறவுகளைப் பாதுகாத்து வருகிறார்.

இந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான மக்கள் பிழைப்புக்காக பல்வேறு அரபு நாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இதன் மூலம் அவர்களின் குடும்பம் மற்றும் மாநிலத்தைத் தாண்டி, ஒட்டுமொத்த இந்தியாவின் அந்நிய செலாவணி கஜானாவையும் அந்நாடுகள் கணிசமாக நிறைத்து வருகிறார்கள் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளின் இந்த மோசமான கருத்தைத் தொடர்ந்து, செளதி அரேபியா, பஹரைன் போன்ற அரபு நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில், இந்தியப் பொருட்கள் நீக்கப்படுவதாக இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஷி தரூர் தன் ட்விட்டர் பக்கத்தில், சவுத் ஏஷியா இண்டெக்ஸ் என்கிற ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள செய்தியை மேற்கோள் காட்டி தன் கருத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?