மர்மங்கள் தீவுகள்: உள்ளே சென்றவர்கள் உயிருடன் திரும்ப முடியாத சென்டினல் முதல் டால்ஸ் வரை! Island (Representative)
உலகம்

மர்ம தீவுகள்: உள்ளே சென்றவர்கள் உயிருடன் திரும்ப முடியாத சென்டினல் முதல் டால்ஸ் வரை!

NewsSense Editorial Team

நம்மில் பலருக்கு ஊர் சுற்றுவது என்றால் கொள்ளைப் பிரியம் தான். அதுவும் குறிப்பாக, கோடை போன்ற விடுமுறை காலங்களில் வீட்டில் இருந்து கிளம்பி எங்காவது ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம்.

இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் சிலர் ஊர் சுற்றுவதையே வேலையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதிலும் சிலருக்கு பயணம், அதில் ஏற்படும் த்ரில்லிங் ஆன விஷயங்கள் மீது அதீத ஆர்வம் இருக்கும். இப்படி ஊர் ஊராக சென்று மர்மமான விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு சில இடங்களை இங்கு அறிமுகப்படுத்துகிறோம்.

Mexico : island of dolls

Dolls Island

இந்த விசித்திரமான இடங்களில் அவசியம் பார்க்க வேண்டிய இடம் மெக்சிகோவில் உள்ள சோசிமிகோ பகுதியில் அமைந்துள்ள டால்ஸ் தீவு. இந்த தீவில் உள்ள மரங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான பொம்மைகள் தொங்கவிடப்பட்டிருக்கும். இதற்கான காரணம் குறித்து அங்குள்ளவர்கள் சில கதைகளை சொல்கிறார்கள்.

அப்பகுதியில் வசித்து வந்த பெண் குழந்தை ஒன்று அருகில் உள்ள கால்வாயில் விழுந்து இறந்ததாகவும், அந்த பெண்ணின் ஆவியை சாந்தப்படுத்தும் விதமாக பொம்மைகள் தொங்கவிடப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த இடம் பின்னாட்களில் சுற்றுலாத் தளமாக மாற்றப்பட்டிருந்தாலும் அங்கு வரும் பயணிகள் அசௌகரியமான விஷயங்களை உணருவதாக சொல்கின்றனர். அதாவது, பேயின் நடமாட்டம் இங்கு இருக்கிறதாம்!

Sentinel Island

இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சென்டினல் தீவு பலநூறு ஆண்டுகளாக மனிதர்களின் வாசம் இல்லாமலே இருக்கும் ஒரு இடமாகும். இந்த தீவில் சுமார் 150 பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் எந்தவொரு வேற்று மனிதரும் தீவுக்குள் நுழைய அனுமதி கொடுப்பதில்லை. இந்த தீவுக்கு சென்று உயிரோடு திரும்பியவர்கள் என்று யாரும் இல்லையாம்.

இப்போது, இந்திய அரசாங்கம் சென்டினல் தீவுக்கு 3 மைல் தூரத்தில் விலக்கு மண்டலத்தை அமைத்துள்ளது. இதற்கான காரணம் என்ன தெரியுமா, சாகசம் என்ற பெயரில் சென்டினல் தீவுக்குள் செல்ல முயற்சிக்கும் நபர்களை கைது செய்து, நடவடிக்கை எடுப்பதற்காம். கேட்கவே சும்மா அதிருதில்ல..,

Chile Island

அமெரிக்காவில் உள்ள சிலி விசித்திரமானதாகவும் அதே நேரத்தில் அழகான தீவாகவும் இருக்கிறது. இந்த தீவு பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மோவாய் சிற்பங்களுக்கு சிறந்த சான்று. இந்த சிற்பங்கள் பண்டைய கால கலாச்சாரங்கள் மற்றும் நினைவுகூரும் விதமாக இருக்கிறது. மேலும் இந்த தீவு பல பறவைகள், விலங்குகளுக்கான இருப்பிடமாகவும் உள்ளது. கேக்க நல்லாதான் இருக்கு...,

Friesland

அடுத்ததாக, வடக்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ள ஃபிரிஸ்லேண்ட் கடந்த 9 ஆம் நூற்றாண்டில் குன்ப்ஜோர்ன் உல்ஃப்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், சில வரலாற்று ஆய்வாளர்கள் இந்த இடம் அயர்லாந்து கடற்கரைப் பகுதிகளில் இருப்பதாகவும் கூறுகின்றனர். எரிக் என்பவரால் கடந்த 10 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கிரீன்லேண்ட் தீவு மிகவும் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாகும்.

Hashima

ஜப்பானில் உள்ள ஹாஷிமா மக்கள் யாருடைய நடமாட்டமும் இல்லாமல் தனித்து விடப்பட்ட தீவாகும். இந்த தீவில் பல கட்டிடங்கள் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் இருக்கிறது. அதாவது, ஹாஷிமா தீவில் பெரிய நிலக்கரிச் சுரங்கம் இருந்ததாகவும், 1974 ஆம் ஆண்டில் சுரங்கம் மூடப்பட்டதுடன் அந்த இடம் கேட்பாரற்று போனதால் பாழடைந்து இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், இன்றளவும் அந்த சுரங்கத்தில் இருந்து வித்தியாசமான சத்தங்கள் எழுந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அதுவா இருக்குமோ!!!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?