எட்டுக்கால் பூச்சிகளை அதன் வலைபின்னும் திறனுக்காக நாம் பார்த்து வியப்பதுண்டு. இந்த எட்டுக்கால் பூச்சியை குறித்த ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், இங்கு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இறந்து போன எட்டுக்கால் பூச்சியை ரோபோவாக மாற்றும் ஒரு வினோதமான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அந்த வீடியோவை youtubeல் பகிர்ந்தது முதல் அது பரவலாக பார்க்கப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவில் உள்ள Rice university எனப்படும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேனியல் பிரெஸ்டன் (Daniel Preston) மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது ஆய்வுக் கூடத்தில் ஒரு சிலந்தி பூச்சி இறந்து கிடப்பதை கண்டுள்ளனர். இறந்துபோன சிலந்தி தனது கால்களைச் சுருக்கிக்கொண்டு கிடந்தது.
சிலந்தியின் உடலில் ஒருவகை திரவம் இருக்கும். அதுதான் சிலந்தியின் கால்களை விரியச்செய்யவும் உறுதியாகப் பற்றிக்கொள்ளவும் உதவுகிறது. சிலந்தி இறந்துபோனதும் அந்த திரவம் செயல் இழந்து விடுகிறது. இதனால் சிலந்தி இறந்து போனதும் தனது கால்களைச் சுருங்கி விடும். சிலந்தியின் உடலில் ஏற்படும் இந்த செயல்பாட்டை அடிப்படையாக வைத்து இவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
சிலந்தியின் உடலில் அந்த திரவம் எவ்வாறு கால்களை விரியச்செய்கிறதோ, அதே போன்று சிலந்தியின் உடலின் மேற்பகுதியில் காற்றைச் செலுத்தி அதன் கால்களை விரியச் செய்து ஏதாவது ஒரு பொருளைப் பற்றிக்கொள்ளச் செய்கின்றனர். இதனை நெக்ரோபாடிக் ஸ்பைடர் என்றழைக்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த நெக்ரோபாடிக் ஸ்பைடர்களை, சிறிய பொருட்களை பற்றி எடுக்கும் இயந்திரமாக உருவாக்கியுள்ளனர்
பேராசிரியர் டேனியல் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதை செயலாக்கும் முயற்சிகளை இன்னும் முழுமையாக மேற்கொள்ளவில்லை என்றாலும், இந்த புதிய கண்டுபிடிப்பு பலரது கவனத்தை பெற்று வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust