விமான விபத்து
விமான விபத்து Pixabay
உலகம்

விமான விபத்து : 33 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண் - ஆச்சரிய தகவல்

NewsSense Editorial Team

இது வழக்கமான பயணிகளை அதிர்ச்சி அடைய வைக்கும் கதை

ஜேஏடி யுகோஸ்லாவ் ஏர்லைன்ஸ் விமானம் 36 இல் விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்தபோது வெஸ்னா வுலோவிக்கின் வயது 23 மட்டுமே.

1972 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி செக் குடியரசு (அப்போது செக்கோஸ்லோவாக்கியா) மீது விமானம் பறந்து கொண்டிருந்தது. ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் மற்றும் செர்பியாவில் உள்ள பெல்கிரேட் இடையே அதன் விமானப் பாதையில் விபத்து ஏற்பட்டது.

விமானம் மூன்று துண்டுகளாக வெடித்து, வெஸ்னாவைத் தவிர அதிலிருந்த அனைவரும் பலியாகினர். அவர் வெடிப்பிலிருந்து தப்பித்தது மட்டுமல்லாமல், பாராசூட் இல்லாமல் 33,333 அடி உயரத்திலிருந்து விழுந்தார்.

அன்று வெஸ்னா அந்த விமானத்தில் பணியாற்றுவதாகத் திட்டமில்லை. விமான நிறுவனம் அவரை அதே பெயரில் உள்ள மற்றொரு விமானப் பணிப்பெண்ணுடன் குழப்பியதால் வெஸ்னா இந்த விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றினார். அவரைப் பொறுத்த வரை இந்தக் குழப்பம் ஒரு துரதிர்ஷ்டம்தான். விமானத்தில் பயணித்த 28 பயணிகள் மற்றும் பணியாளர்களிடையே அவர் மட்டுமே விபத்தில் தப்பித்தார்.

வெஸ்னா பாராசூட் இல்லாமல் மிக உயரத்திலிருந்து கீழே விழுந்தது, இதற்கு முன்னர் யாருக்கும் நடந்திராத ஒன்று. ஐம்பது ஆண்டுகள் கடந்தும், இது இன்னும் கின்னஸ் உலக சாதனையாக உள்ளது.

ஜனவரி 26, 1972 அன்று வெஸ்னா JAT விமானம் 367 எங்குப் புறப்பட்டதோ அந்த இடத்தில் ஏறவில்லை. டென்மார்க் கோபன்ஹேகனில் விமானம் நிறுத்தப்பட்டபோது அதில் ஏறிய இரண்டாம் நிலை கேபின் குழுவில் அவரும் இருந்தார். துரதிர்ஷ்டவசமாக குரோஷியாவில் விமானம் இரண்டாவது முறையாக நிற்பதற்கு முன்னர் விபத்து ஏற்பட்டு வெஸ்னாவைத் தவிர யாரும் உயிருடன் இல்லை.

2002 ஆம் ஆண்டு கிரீன் லைட் லிமிடெட் உடனான நேர்காணலில் வெஸ்னாவே அந்த விமானத்தில் தவறுதலாக பணியாற்றிய உண்மை விவகாரத்தை வெளிப்படுத்தினார்.

"எனது சக ஊழியர்களுக்கு தங்களுக்கு ஏதாவது நேரிடும் என்ற எண்ணம் இருந்தது. கேப்டன் 24 மணிநேரம் அவரது அறையில் அடைத்துக் கொண்டார். அவர் வெளியே செல்லவே விரும்பவில்லை" என்று வெஸ்னா Green Light Limited இடம் கூறினார்.

என்ன தவறு நேர்ந்தது?

கோபன்ஹேகனில் இருந்து விமானம் புறப்பட்ட 46 நிமிடங்களில் லக்கேஜ் பெட்டியில் பெரும் வெடிப்பு ஏற்பட்டது. வெடிப்பு மிகவும் பெரியதாக இருந்ததால் அது விமானத்தை மூன்று துண்டுகளாகக் கிழித்து விட்டது. கேபின் அறை பூட்டப்பட்டு அழுத்தம் குறைந்ததால் பயணிகள் மற்றும் பிற விமானக் குழுவினர் வெளியே தூக்கி எறியப்பட்டதாக நம்பப்படுகிறது.

கின்னஸ் உலக சாதனைகளின் படி, வெஸ்னா விமானத்திலிருந்த ஒரு உணவு வண்டியின் வால் முனையில் பிணைக்கப்பட்டு கீழே விழுந்தார். பின்னர், விசாரணையில் விமானத்தின் சரக்கு பிரிவில் வைக்கப்பட்டிருந்த பிரீஃப்கேஸ் வெடிகுண்டு வெடித்தது தெரியவந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?