இனி திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் தம்பதிகள், பெண்கள் சட்டப்பூர்வமாக குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீனாவின் சிச்சுவான் மாகாணம்.
1979 முதல் சீனாவில் தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தது. இது மக்கள் தொகையை பாதித்ததால், கடந்த 2016ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தது சீன அரசு.
அதன் பிறகு இரண்டு குழந்தைகளை ஒரு தம்பதி பெற்றுக்கொள்ளலாம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டது. சட்டத்தை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, அல்லது வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். கருக்கலைப்புகள் நிகழ்த்தப்பட்டதாக பிபிசி தளத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
நாட்டில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததனால், பொருளாதாரம், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதை கண்ட சீன அரசு, மெதுவாக குழந்தைப்பேறில் சட்ட தளர்வுகளை அமல்படுத்த தொடங்கியது.
எனினும் மக்கள் தொகை பாதிப்பு தொடர்ந்து வந்தது, பிறப்பு விகிதத்தைவிட கடந்த ஆண்டு, இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. இளைஞர்கள் பொருளாதாரம், சமூக அழுத்தம் போன்ற விஷயங்களை கருத்தில்கொண்டு திருமணம் செய்துகொள்ளவும், குழந்தை பெற்றுகொள்ளவும் மறுத்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தம்பதிகள் 3 குழந்தைகள் வரைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சட்டத்தை மாற்றியமைத்தது சீன அரசு.
ஆனால், திருமணமாகதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அங்கு சட்டபூர்வமாக அனுமதி இருந்ததில்லை. அப்படி யாரேனும் குழந்தை பெற்றுக்கொண்டால், அக்குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்ய முடியாது. இந்நிலையில், இந்த கட்டுப்பட்டினை தளர்த்தியுள்ளது சீனாவின் சிச்சுவான் மாகாணம்.
இனி சிச்சுவான் மாகாணத்தில் ஒரு தம்பதி எத்தனைக் குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். சிச்சுவான் மாகாணத்தின் தற்போதைய மக்கள் தொகை 80 மில்லியன் ஆகும். 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது சிச்சுவான். இதனால், இங்கு பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாகவே இந்த தளர்வினை அரசு அறிவித்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust