Sikh Man Breaks His Own Record For World's Longest Beard  Twitter
உலகம்

8 அடி, 3 அங்குலம் : நீளமான தாடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த நபர் - எங்கே?

Priyadharshini R

பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகளை படைத்து வருகின்றனர்.

உடற்பயிற்சியில் சாதனை, ஓவியம் வரைவதில் சாதனை, நடனமாடுவதில் சாதனை இப்படி ஒவ்வொரு விஷயங்களிலும் தினம் தினம் பலர் சாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், தாடி வளர்த்ததன் மூலம் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் என்பதை நம்ப முடிகின்றதா?

கனடிய சீக்கியர் ஒருவர் மிக நீளமான தாடி வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கொலம்பியாவின் சர்ரேவைச் சேர்ந்த சர்வான் சிங், தனது சாதனையை தானே முறியடித்து சாதனை படைத்துள்ளார்.

தனது தாடியை 7அடி 8 அங்குலமாக வளர்த்து காட்டியதன் மூலம் முந்தைய சாதனையை முறியடித்தார்.

2010ஆம் ஆண்டு இவரது தாடி அளவிடப்பட்டபோது 8 அடி 2.5 அங்குலமாக வளர்ச்சியடைந்திருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வன் சிங்கின் தாடி அளவிடப்பட்டபோது, அது 8 அடி 3 அங்குலமாக வளர்ந்திருந்தது.

இவர் முன்பு தான் செய்து வைத்திருந்த சாதனையை தானே மீண்டும் முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையில், “நான் 17 வயது முதல் தாடி வளர்த்து வருகின்றேன். ஒருபோதும் வெட்டியதில்லை. நானொரு சீக்கியராக இருப்பதால் தாடி முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இதை கடவுளின் பரிசாக நான் கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?