Abortion  twitter
உலகம்

Spain : பெற்றோரின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்யலாம் - ஸ்பெயின் அரசு ஒப்புதல்

Priyadharshini R

Abortion16 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பெற்றோரின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கும் வரைவு மசோதாவுக்கு ஸ்பெயின் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கருக்கலைப்பு என்பது பல நாடுகளில் சட்ட விரோதமான ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும் சில நாடுகளில் அரசு சட்டப்படி அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் கர்ப்பத்தைக் கலைப்பதற்கு முன் பெற்றோரின் சம்மதம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கும் வரைவு மசோதாவுக்கு ஸ்பெயின் அரசாங்கம் மே 18 ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Abortion

மேலும் கருக்கலைப்பு என்பது கர்ப்பத்தின் 14 வது வாரம் வரை அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார அமைப்பில் கருக்கலைப்பு உரிமையைப் பாதுகாப்பதும், பெண்கள் தங்கள் உடல் மற்றும் அவர்களின் வாழ்க்கை குறித்து முடிவு செய்வதைத் தடுக்கும் தடைகளை அகற்றுவதும் இந்த சட்டத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் ஐரீன் மான்டெரோ கூறியுள்ளார்.

menstrual

சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் பெண்கள் தங்கள் மாதவிடாயின் போது மாதத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பினை அந்நாட்டு அரசு வெளியிட்டு பெண்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?