Srilanka Twitter
உலகம்

Morning News Today : 'எச்சரிக்கையாக இருங்கள்'- இலங்கையிலுள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக கொழும்பு நகரில் உள்ள இந்தியத் தூதரகம் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

NewsSense Editorial Team

கடந்த சில மாதங்களாகவே இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளானர்.

இதன் காரணமாக இலங்கையில் மக்கள் போராட்டம் வன்முறையாக மாறியிருக்கிறது.இந்த சூழலில், இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள இந்தியத் தூதரகம் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், "இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில், இங்குள்ள இந்தியர்கள் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளுங்கள், அதன்பின்னர் உங்களின் பயணம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என அறிவுறுத்தியிருக்கிறது.

OPS - EPS

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு 'சீல்' வைத்தது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு

அ.தி.மு.க.-வின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 11-ந்தேதி வானகரத்தில் நடைபெற்றது. அப்போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு, ஒற்றைத் தலைமை விவகார சர்ச்சையின் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர்.

இதில் அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவர் தரப்பிலும் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி என்.சதீஷ்குமார் இந்த வழக்குகளைக் கடந்த வாரம் விசாரித்தார். பின்னர் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்குப் பிறப்பிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Rishi Sunak

இங்கிலாந்து பிரதமர் பதவி: இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை

அண்மையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. போட்டியில் 8 வேட்பாளர்கள் களமிறங்கியதால் 2 இறுதி வேட்பாளரைத் தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் பல்வேறு கட்டங்களாக வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த வாரம் நடந்த 2 சுற்றுத் தேர்தல்களில் 3 வேட்பாளர்கள் வெளியேறி, 5 வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.இதில், முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் முதல் இடத்தை பிடித்து முன்னிலை வகித்தார். நேற்று முன்தினம் 3-வது சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதிலும் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

Elon Musk

எலான் மஸ்க் மீதான வழக்கு அக்டோபரில் விசாரணை

டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாகக் கூறிவிட்டு, பின் அதன் சில கட்டுப்பாடுகள் சரிவராததால் அந்த முடிவைக் கைவிட்டார் எலான் மஸ்க். இந்நிலையில், 4 பில்லியன் டாலர்களுக்கான விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டு இறுதி செய்யும் நேரத்தில் இந்த முடிவு வந்ததால் டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கின் மீது வழக்கு தெடர்ந்துள்ளது.

இந்த வழக்கு டெல்லவிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்குமாறு எலான் மஸ்க் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், வழக்கு விசாரணை வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என நீதிபதி அறிவித்திருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?