Steve Jobs Twitter
உலகம்

Apple: ஏலத்திற்கு வரும் ஸ்டீவ் ஜாப்ஸின் காலணி - விலை என்ன தெரியுமா?

ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த காலணிகளை 1970 முதல் 1980 வரை பயன்படுத்தியிருந்தார். ஏலம் விடப்படும் முன் இந்த காலணிகளை ஸ்டீவ் ஜாப்ஸின் தனிபட்ட மேலாளரான மார்க் ஷெஃப் என்பவர் வைத்திருந்ததாக என்டிடிவி தளம் தெரிவிக்கிறது.

Keerthanaa R

ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவும் துணை நிறுவனருமான ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய காலணிகள் ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த காலணிகள் ஜூலியன் ஆக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பாக ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. இதன் விலை 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் டாலர்கள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 48 முதல் 65 லட்சம் வரை!

நவம்பர் 11 அன்று தொடங்கிய இந்த ஏலம், நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. ஏலத்திற்கு விடும் நிறுவனத்தின் அறிக்கையின் படி, ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த காலணிகளை 1970 முதல் 1980 வரை பயன்படுத்தியிருந்தார். ஏலம் விடப்படும் முன் இந்த காலணிகளை ஸ்டீவ் ஜாப்ஸின் தனிபட்ட மேலாளரான மார்க் ஷெஃப் என்பவர் வைத்திருந்ததாக என்டிடிவி தளம் தெரிவிக்கிறது.

இது தோலினால் செய்யப்பட்ட Birkenstock Arizona காலணிகள். மற்ற பொருட்களாக இந்த சாண்டல்களுடன், புகைப்பட கலைஞர் ஜீன் பிகோசி எழுதிய தி 213 மோஸ்ட் இம்பார்டன்ட் மென் இன் மை லைஃப் என்ற புத்தகம் மற்றும் இந்த காலணிகளின் புகைப்படமும் ஏலத்தில் விடப்படுகிறது

இது குறித்து பேசிய ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி, "இந்த காலணிகள், அவரது எளிமையின் ஒரு எடுத்துகாட்டு. இவை அவருடைய சீருடைபோன்றது. சீருடைகளின் சிறப்பு என்னவென்றால், தினமும் என்ன ஆடை அணிவது என்ற குழப்பம் நமக்கு இருக்காது"

ஆப்பிளின் வரலாற்றில் பல முக்கிய தருணங்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த செருப்புகளை அணிந்திருந்தார் என்று ஏல நிறுவனம் கூறுகிறது.

"1976 ஆம் ஆண்டில் ஆப்பிளின் இணை நிறுவனர் ஸ்டீவ் வாஸ்நியாக்குடன் ஆப்பிள் கணினி அறிமுகப்படுத்திய நேரத்தில் இந்த காலணிகளை அணிந்திருந்தார். ஜாப்ஸ் பிர்கென்ஸ்டாக் நிறுவனத்தின் நடைமுறை தன்மையால் ஈர்க்கப்பட்டார். அதுவே அந்த காலணிகளை அவர் தேர்ந்தெடுக்க காரணம்" என அவர்களது இணையதளம் குறிப்பிடுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?