Ukraine: ராணுவ வீரர் மார்பை துளைத்த கிரெனேட் வெடிகுண்டு - லாவகமாக அகற்றிய மருத்துவர்!
Ukraine: ராணுவ வீரர் மார்பை துளைத்த கிரெனேட் வெடிகுண்டு - லாவகமாக அகற்றிய மருத்துவர்! canva
உலகம்

Ukraine: ராணுவ வீரர் மார்பை துளைத்த கிரெனேட் வெடிகுண்டு - லாவகமாக அகற்றிய மருத்துவர்!

Keerthanaa R

உக்ரைன் ராணுவ வீரரின் உடலுக்குள் வெடிக்கும் தருவாயில் இருந்த கிரெனேட் வெடிகுண்டை வெற்றிகரமாக அகற்றியுள்ளார் மருத்துவர் ஆண்ட்ரி வெர்பா.

ரஷ்யா உக்ரைன் போர் பதினோரு மாதங்களை எட்டியுள்ளது. உக்ரைனின் பல பகுதிகள் இந்த போரில் சேதமடைந்துள்ளன, மேலும், பல வீரர்கள் உயிரிழந்துள்ளனர். போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரது உடலை கிரெனேட் வெடிகுண்டு துளைத்தது. அது வெடிக்கும் தருவாயில் அவரது மார்பில் இருந்த நிலையில், மிகவும் கவனத்துடன், லாவகமாக குண்டு வெடிக்காமல், அதனை அகற்றியுள்ளார் வின்னிட்சியாவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி வெர்பா.

இந்த சவாலான அறுவை சிகிச்சையை அவர் இரண்டு உக்ரேனிய வீரர்களின் முன்னிலையில் மேற்கொண்டுள்ளார். வழக்கமான எலக்ட்ரோகோவாகுலேஷன் முறையை பயன்படுத்தாமல் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

எலக்ட்ரோகோவாகுலேஷன் அறுவைசிகிச்சை முறை, வெடிகுண்டை வெடிக்கவைக்கும் அபாயம் இருந்ததால், அம்முறை கைவிடப்பட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனில் உள்ள உப்பு சுரங்க நகரமான சோலேடரை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா தனது இராணுவ தாக்குதலை முடுக்கிவிட்டது. அப்போது பயன்படுத்தப்பட்ட கிரெனேட் லான்சரை வைத்து சுட்டதில், இந்த குண்டு ராணுவ வீரரை தாக்கியுள்ளது.

சோலேடரின் அருகிள்ள பாக்முட் என்ற இடத்தை கைப்பற்றும் முனைப்பில் தான் இந்த நகரத்தில் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

ராணுவ வீரரின் உடலை துளைத்த வெடிகுண்டு அவரது மார்பகத்தை தாக்கியது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலையில் அவரது உடலுக்குள் இந்த வெடிகுண்டு இருந்துள்ளது. இதனை வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர் மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி வெர்பாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?