Tamil Latest News Today : கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை? Twitter
உலகம்

Tamil Latest News Today : கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

NewsSense Editorial Team

கனமழை : தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்திருக்கிறார். திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்துக்கான நிதி குறைப்பு

நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில், ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 545 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த முறையும், அந்த அமைச்சகத்துக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு பின்னர், திருத்தப்பட்ட மறுமதிப்பீட்டின்படி, நிதி ஒதுக்கீடு ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், தற்போது ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், நிதி ஒதுக்கீடு 13 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீட்டில், 100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதிஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில், 100 நாள் வேலைத்திட்டத்துக்கு முதலில் ரூ.73 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர், திருத்தப்பட்ட மறுமதிப்பீட்டின்படி ரூ.89 ஆயிரத்து 400 கோடியாக உயர்த்தப்பட்டது. எனவே, அதனுடன் ஒப்பிடுகையில், தற்போதைய ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்பது 32 சதவிகிதம் குறைவு. அதாவது, 3-ல் ஒரு பங்கு நிதி குறைக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போட்டி?

அடுத்த ஆண்டு நவம்பர் -5 ம் தேதி, அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கென இப்போதிருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படி அறிவித்து, தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த பெண் அரசியல்வாதியும், இந்திய வம்சாவளியுமான நிக்கி ஹாலே போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 15-ந் தேதி அவர் தனது முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சாதனை வெற்றியால் தொடரை வென்ற இந்தியா!

இந்தியாவுக்கு வந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி- 20 தொடரில் பங்கேற்றுள்ளது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்தும், லக்னோவில் நடந்த 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?