Elon Musk twitter
உலகம்

எலான் மஸ்க் : ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க முடிவு - 43 பில்லியன் பேரம்

Antony Ajay R

டெஸ்லா ஸ்பேஸ் X நிறுவனங்களின் தலைவரும் உலகின் நம்பர் 1 பணக்காரருமான எலான் மஸ்க் ட்விட்டர் சமூக வலைத்தளத்தை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதற்காக 43 பில்லியன் டாலர்கள் வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 விழுக்காடு பங்குகளை வாங்கினார் எலான் மஸ்க். ட்விட்டரில் எடிட் செய்யும் வசதி உருவாக்கப்பட வேண்டுமா? உள்ளிட்ட கருத்துக்களை கேட்கத் தொடங்கினார் மஸ்க். பிறகு ட்விட்டரின் தலைமையகத்தை மாற்றுவது விளம்பர கொள்கையில் மாற்றம் செய்வது போன்ற யோசனைகளை பதிவிட்ட மஸ்க் அவற்றை திடீரென டெலிட் செய்யவும் செய்தார். அதன் பிறகு மஸ்க்கை நிர்வாக குழுவில் சேர்த்துக்கொள்ள ட்விட்டர் நிறுவனம் முன்வந்தது. ஆனால் எலான் மஸ்க் சேர விருப்பமில்லை எனக் கூறிவிட்டார்.

எலான் மஸ்க் எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் தொழிலதிபர். அவரது நகைச்சுவை கலந்த கருத்துக்களையும் கூலான ஐடியாக்களையும் பார்ப்பதற்காகப் பல இளைஞர்கள் அவரை பின் தொடர்கின்றனர். ஆரம்பத்தில் ட்விட்டரில் கருத்துச் சுதந்திரம் இல்லை எனக் குறை சொல்லி வந்த மஸ்க் ட்விட்டருக்குன் மாற்றாக புதிய செயலியை உருவாக்கப் போவதாகவும் கூறினார். ஆனால் திடீரென ட்விட்டர் பங்குகளை வாங்கினார்.

எலான் மஸ்க்

கடந்த ஜனவரி மாதம் முதலே ட்விட்டர் பங்குகளை வாங்கத்தொடங்கினார் மஸ்க். 620,000 க்கும் அதிகமான பங்குகளை ஒவ்வொன்றும் $36.83 க்கு வாங்கினார். அன்றிலிருந்து ஏப்ரல் 1 வரை கிட்டத்தட்ட ஒவ்வொரு வர்த்தக நாளிலும், அவர் நூறாயிரக்கணக்கானபங்குகளை வாங்கினார். இதனால் மார்ச் மாதமே நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை வாங்கிவிட்டார்.

5% பங்குகளை வாங்கிய பின்னரும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால் ட்விட்டரின் இதர பங்குதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் பங்குதாரர் ஒருவர் மஸ்கின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் 9.2% பங்குகளை வாங்கியப்பின்னர் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மஸ்க் ட்விட்டரில் அதிக மாற்றங்களைக் கொண்டுவருவார் என நெட்டிசன்கள் எதிர்பார்த்தனர். தற்போது மஸ்க் மொத்த நிறுவனத்தையும் வாங்க முன்வந்துள்ளார்.

தற்போது ட்விட்டரின் பங்கு ஒன்றுக்கு 54.20 டாலர் பணம் தருவதாக ட்விட்டரிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் மஸ்க்.

“ட்விட்டர் ஒரு பூரண கருத்து சுதந்திரம் உடைய சமூக வலைத்தளமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் ட்விட்டரின் பங்குகளை வாங்கினேன். ஜனநாயகம் தடங்கலின்றி செயல்படப் பேச்சு சுதந்திரம் மிக முக்கியம் எனக் கருதுகிறேன்” என்று கூறும் மஸ்க், “நான் நிறுவனத்தின் அதிக பங்குகளை வாங்குவதனால் ட்விட்டரை கருத்துச் சுதந்திரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் தளமாக உருவாக்க முடியாது என்பதை இப்போது உணர்கிறேன். ட்விட்டர் ஒரு தனியார் நிறுவனமாகச் செயல்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார். அத்துடன் அவரின் விருப்பத்தை நிறுவனம் மறுப்பதானால் தான் தொடர்ந்து பங்குதாரராக இருப்பது குறித்து மறு ஆய்வு செய்வதாகவும் மஸ்க் கூறியுள்ளார்.

எலான் மஸ்கின் விருப்பத்துக்கு பதிலளித்த ட்விட்டர் நிறுவனம், "எலான் மஸ்கின் விருப்பத்தை ட்விட்டர் நிர்வாக குழு கவனமாக ஆய்வு செய்து முடிவெடுக்கும். நிர்வாகத்தினர் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்கள் மற்றும் நலன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்" எனக் கூறியிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?