பாலியல் சுற்றுலா, பௌத்தம், யானைகள் - 'தாய்லாந்து' பூலோக சொர்க்கமாக இருக்க என்ன காரணம்? Twitter
உலகம்

பாலியல் சுற்றுலா, பௌத்தம், யானைகள் - 'தாய்லாந்து' பூலோக சொர்க்கமாக இருக்க என்ன காரணம்?

ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் மக்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்கின்றனர். தாய்லாந்து மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் இணைந்து 1.1கோடி மக்கள் பாங்காங்-க்கு சுற்றுலா வருகின்றனர்.

Antony Ajay R

தாய்லாந்து நாட்டைப் பற்றி சிந்தித்தாலே மனதுக்குள் ஒருவகை உற்சாகம் பிறப்பெடுக்கும்.

உண்மையில் ஒரு அமைதியான, மகிழ்ச்சியான நாடு தாய்லாந்து. அங்குள்ள மக்கள் இனிமையாக பழகக் கூடியவர்கள்.

இந்த நூற்றாண்டிலும் பாரம்பரியங்களைக் கொண்டாடுவது அவர்களின் தனித்துவம். தாய்லாந்து மக்கள் தாய் (Thai Language) மொழிப் பேசி வருகின்றனர்.

பெரும்பாலும் பாலியல் சுற்றுலாவுக்காக மட்டுமே அறியப்பட்டு வந்த தாய்லாந்து குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கலாம்.

தென் கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்கள் ஆளாத ஒரே நாடு தாய்லாந்து மட்டும் தான்.

தாய்லாந்து என்றால் சுதந்திரமான நிலம் எனப் பொருள். 1939ல் இந்த பெயர் மாற்றப்படுவதற்கு முன்னர் சியாம் என அழைக்கப்பட்டது.

மன்னராட்சி நிலவி வந்த தாய்லாந்தில் 1932ம் ஆண்டு போர் இல்லாமல் போராட்டங்கள் வழியாகவே புரட்சி வென்றது. இதனால் இங்கிலாந்து போல முடியாட்சி அரசியலமைப்பில் செயல்பட்டு வருகிறது தாய்லாந்து.

தாய்லாந்தில் 76 மாகாணங்கள் உள்ளன. மக்கள் தொகை 7 கோடி.

பெரும்பாலும் மக்கள் தாய் இனத்தைச் சேர்ந்தவர்கள். தாய் மலாய்க்காரர்கள், மோன்ஸ், கெமர்கள் மற்றும் பல்வேறு மலைவாழ் பழங்குடியினர். சீன வம்சாவளி மக்களும் தாய்லாந்தில் அதிகமாக வசிக்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் தாய்லாந்தை அதிகம் விரும்பக்காரணம் அங்குள்ள பெரும்பாலான மக்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கும். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆங்கிலம் பழக்கம் இல்லாமல் இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் மக்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்கின்றனர். தாய்லாந்து மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் இணைந்து 1.1கோடி மக்கள் பாங்காங்-க்கு சுற்றுலா வருகின்றனர்.

தாய்லாந்து அதன் பல்லுயிர்தன்மைக்கும் பெயர்பெற்றது. உலகின் மிகச் சிறிய பாலூட்டியான பம்பல்பீ பேட் வௌவால்களும், மிகப் பெரிய மீனான whale shark க்கும் தாய்லாந்தில் வசிக்கின்றன.

உலகில் உள்ள மொத்த விலங்கு இனங்களில் 10ல் ஒரு பங்கு தாய்லாந்தில் உள்ளது. பறவைகளிலும் 10ல் ஒரு பங்கு இனங்களுக்கு தாய்லாந்து வீடாக திகழ்கிறது.

தாய்லாந்தின் தேசிய விலங்கு யானை. 1900களில் 1 லட்சம் சிறைபிடிக்கப்பட்ட யானைகள் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.

தாய்லாந்தில் அதிகமாக காடுகள் இல்லை என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் 100 ஆண்டுகளுக்கு மிகப் பெரிய காடுகள் வடக்கு தாய்லாந்தில் இருந்தன. இப்போது அவற்றில் கால்வாசி மட்டுமே இருக்கிறது. இதனால் தாய் அரசு மரம் வெட்டுதலை முற்றிலுமாக தடை செய்துள்ளது.

தாய்லாந்து மக்கள் அரச குடும்பத்துக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டியது மிக முக்கியம். தவறினால் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியது இருக்கும்.

The King and I என்ற படம் மன்னர்களைப் பற்றி இழிவாக சித்தரிப்பதனால் அதனைத் தாய்லாந்தில் திரையிட தடை விதித்தனர்.

தாய்லாந்து கலாச்சாரப்படி தலை மிகவும் உயர்வான உடலுறுப்பாகவும் கால் மிகவும் இழிவான உறுப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதனால், யாரும் மற்றவர் தலையில் கைவைப்பதில்லை. குழந்தையின் தலையில் கூட. யாரும் மற்றவருக்கு நேராக கால் நீட்டுவதில்லை. குறிப்பாக கோவில் சிலைகளுக்கு நேராக.

தாய்லாந்தில் சட்டையில்லாமல் வாகனம் ஓட்டிச் செல்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி இருந்தாலும் கோயில்களுக்கு செல்லும் போது ஸ்லீவ்லெஸ், ஷார்ட்ஸ் கூட அணியக் கூடாது.

புத்த துறவி

அந்த நாட்டில் 35000 கோவில்கள் உள்ளன. உண்மையில் தாய்லாந்து கோவில்களின் தேசம். புத்த மதத்துக்கான ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பினால் நிச்சயமாக தாய்லாந்துக்கு தான் செல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் அனைத்து தாய் ஆண்களுமே புத்த துறவியாக மாறும் பழக்கம் இருந்தது. வாழ்க்கையில் டீன்-ஏஜ்க்கு பிறகு குறைந்த கால கட்டமாவது ஆண்கள் புத்த துறவியாக இருந்தனர்.

மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்

தாய்லாந்து முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் 1946 ஜூன் 9ம் தேதி மன்னராக பதவியேற்று 2017 அக்டோபர் 13 (அவரது மரணம்) வரை ஆட்சி செய்தார். உலக வரலாற்றிலேயே அதிக காலம் ஆட்சி செய்த மன்னர் என்ற பெருமை அவருக்கு இருக்கிறது.

தாய்லாந்தின் மழைக்காடுகளில் 1500 வகை ஆர்க்கிட் பூக்கள் இருக்கிறது. உலகில் மிகப் பெரிய ஆர்க்கிட் ஏற்றுமதியாளராகவும் திகழ்கிறது தாய்லாந்து.

நம்மைப் போலவே தாய் மக்களும் அரிசியை பிரதான உணவாக கொண்டிருக்கின்றனர். உலகிலேயே அதிகப்படியாக அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாகவும் தாய்லாந்து திகழ்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?