துருக்கி, இஸ்தான்புல்லின் மையப்பகுதியில் அமைந்துள்ள டோப்காபி அரண்மனை அருங்காட்சியகம் நான்கு நூற்றாண்டுகளாக ஒட்டோமான் சுல்தான்களின் வசிப்பிடமாக இருந்த ஒரு அரண்மனையில் அமைந்துள்ளது.
மட்பாண்டங்கள், நகைகள், ஜவுளிகள் மற்றும் பிற கலைப்பொருட்களின் வளமான சேகரிப்பு இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது.
உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான வரலாற்று அருங்காட்சியகங்களில் இருந்து இது தனித்துவம் பெற்றதாக உள்ளது. சில அறைகள் தாஜ்மஹாலை விட அழகாக இருக்கும் என்கின்றனர் இதனை பார்த்தவர்கள்.
ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸ் அருங்காட்சியகம் மலையுச்சியின் மையத்தில் காணப்படுகிறது. இங்கு இருக்கும் கலைப்பொருட்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்தவை.
அருங்காட்சியகத்தில் சுவையான கிரேக்க உணவுகளுடன் ஒரு அற்புதமான கஃபே-உணவகமும் உள்ளது.
அருங்காட்சியகத்தின் நேர்த்தியான மற்றும் நவீன கட்டிடம் பழங்காலத்தையும் நவீனத்துவத்தையும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளது. உலகில், அக்ரோபோலிஸ் அருங்காட்சியகம் மிகவும் நம்பமுடியாத பிரம்மிப்போடு திகழ்கிறது.
சில பழங்கால நாகரிகங்கள் நித்தியமாக மாறிவிட்டன. அவற்றின் மீதான உலகளாவிய ஈர்ப்பு அதிகாமாகி விட்டது. எகிப்தின் கெய்ரோவில் உள்ள அருங்காட்சியகத்தில் பண்டைய எகிப்திய தொல்பொருட்களின் மிக விரிவான சேகரிப்புகள் உள்ளன.
இங்கு சிலைகள், நினைவுச்சின்னங்கள், கலைப் பொருட்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட மம்மிகள் உள்ளன. டுட்டின் கல்லறையின் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கப் பொக்கிஷங்களை இங்கு காண முடியுமாம்.
ஜார்ஜிய தேசிய அருங்காட்சியகத்தைப் பொறுத்தவரை, முன்னாள் சோவியத் குடியரசு அதன் சொந்த எல்லைகளுக்கு அப்பால் கூட எவ்வளவு தூரம் செல்வாக்கு செலுத்தியது என்பதை பார்வையாளர்கள் அறிந்து ஆச்சரியப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2004 இல் நிறுவப்பட்டது. அந்த அருங்காட்சியத்தில் ஜார்ஜியாவின் வரலாற்றுக்கு முந்தைய ராஜ்ஜியங்களின் நம்பமுடியாத தங்கம் மற்றும் வெள்ளி நினைவுச்சின்னங்களைக் காண்பிக்கும் தொல்பொருட்கள் இங்கு உள்ளன.
அன்னே ஃபிராங்க் ஹவுஸ் என்பது ஒரு எழுத்தாளரின் இல்லம் ஆகும்.
நெதர்லாந்தில் மத்திய ஆம்ஸ்டர்டாமில் வெஸ்டர்கெர்க்கிற்கு அருகில் உள்ள பிரின்சென்கிராட் என்ற இடத்தில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust