Father's Day: உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுவது ஏன்? மறக்கப்பட்ட வரலாறு! canva
உலகம்

Father's Day: உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுவது ஏன்? மறக்கப்பட்ட வரலாறு!

Keerthanaa R

மனிதர்கள் பொதுவாக தங்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்து அளவு கூட, தந்தையாக இருப்பவர் வெளிப்படுத்துவதில்லை.

நல்ல வேடிக்கையாக பேசி சிரித்துக்கொண்டிருப்பவரும், தந்தை என்ற அந்தஸ்த்தை அடைந்தவுடன், இறுக்கமாக மாறிவிடுகிறார். அல்லது பொறுப்புகள் அவரை மாற்றிவிடுகிறது.

உணர்வுகளை வெளிப்படுத்துபவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம் தந்தை நமக்கு ஹீரோ தான். அப்படிப்பட்ட ஹீரோக்களை கொண்டாடும் உலக தந்தையர் தினம் இன்று.

தந்தையர் தினம் என தெரிந்தவுடன், "அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று, நமக்கெனவே வந்த நண்பன் தந்தை" என்ற கேப்ஷன்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதுடன், ஏன் இத்தினம் கொண்டாடப்படுகிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்

முதலில் வந்தது அன்னையர் தினம் தான்

ஆணாதிக்க சமூகமாக இருந்த இந்த உலகத்தில், அன்னையர் தினம் தான் முதலில் கொண்டாடப்பட்டது. தந்தையர்களை கொண்டாட ஒரு தனி நாள் இருக்கவில்லை என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

ஆனால், தாய்மைய கொண்டாடாமல், பெண்மையை, அதன் மென்மையை வெளிகாட்டும் ஒரு நாளாகவே அன்னையர் தினம் முதலில் பார்க்கப்பட்டது. தந்தையின் மகத்துவத்தை கொண்டாடுவதை 1900களில் மக்கள் ஆண்களை பலவீனப்படுத்துவதாக கருதினர்.

1914ல் அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தார். 1508ஆம் ஆண்டு முதலே தெற்கு ஐரோப்பிய பகுதிகளில் தந்தையர் தினத்தை கொண்டாடும் வழக்கம் பின்பற்றப்பட்டாலும், 1972ல் தான் அதிகாரப்பூர்வமாக அதனை விடுமுறையாக அறிவித்தனர்

அப்படி ஆண்களால் ஆளப்பட்ட இந்த சமூகத்தில், தந்தையர்களை கொண்டாடவேண்டும் என முதற்படி எடுத்து வைத்தவர் என்னவோ ஓரு பெண்மணி தான்!

எப்படி வந்தது தந்தையர் தினம்?

கிரேஸ் கோல்டன் கிலேட்டன்

தந்தைகளை முதன் முதலில் கொண்டாட்டிய தினம் ஜூலை 5 1908.

கிரேஸ் கோல்டன் கிலேட்டன் என்ற பெண்மணி ஒரு சுரங்க விபத்தில் இறந்த நூற்றுக்கணக்கான தந்தைகளை கௌரவிக்கும் விதமாக ஒரு நாளை அர்ப்பணித்தார். எனினும், அன்றுடன் அந்த நாள் மறக்கப்பட்டது. தொடர்ந்து ஆண்டு தோறும் பின்பற்றப்படவில்லை.

ஆனால், தந்தையர் தினத்தை கொண்டாட அடிக்கல் நாட்டப்பட்டது...

சொனோரா ஸ்மார்ட் டாட்

சொனோராவின் தந்தை, வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் ஒரு தனித்தந்தை. விவசாயியும் ராணுவ வீரருமான இவருக்கு சொனோராவுடன் சேர்த்து 6 குழந்தைகள். அவரது மனைவி இறந்த பிறகு தனி ஆளாக குழந்தைகளை வளர்த்தார்

1909ல் ஒரு நாள் திருச்சபையில் அன்னையர் தின அனுசரிப்பின் போது தான் சொனோராவுக்கு ஒரு யோசனை தொன்றியது. தந்தையர்களை அங்கீகரிக்கவேண்டும் என, அவர்களை கொண்டாடவேண்டும் என. அப்போது அவருக்கு 27 வயது

ஜூன் மாதத்தில் மூன்றாவது ஞாயிறு

யோசனை உதித்த சில மாதங்களுக்குள், ஸ்போகேன் மந்திரி சங்கம் மற்றும் ஒய்எம்சிஏ ஆகியோரை ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடுவதற்கு ஒதுக்குமாறு சோனோரா பேசி ஒப்புக்கொள்ளவைத்தார்.

அப்போது அவர் முன்மொழிந்த தேதி ஜூன் 5, அதாவது சொனோராவின் தந்தையுடைய பிறந்த தினம்.

ஆனால் அமைச்சர்கள் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்தனர்.

இதன் மூலம் அன்னையர் தினத்திற்குப் பிறகு (மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை) அவர்கள் தங்கள் பிரசங்கங்களைத் தயாரிக்க அதிக நேரம் கிடைக்கும் என சபை நினைத்தது.

எனவே, ஜூன் 19, 1910 இல், முதல் தந்தையர் தின நிகழ்வுகள் தொடங்கி முதல் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.

சோனோரா ஊனமுற்ற தந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். YMCA யைச் சேர்ந்த சிறுவர்கள் தந்தையர்களுக்கு ரோஜாக்களை வழங்கினர் (உயிருள்ள தந்தைகளுக்கு சிவப்பு, இறந்தவர்களுக்கு வெள்ளை).

1972ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாஷிங்க்டனின் ஸ்போகானில் கொண்டாடப்பட்ட இத்தினத்தை பற்றிய பேச்சுக்கள் பரவின. ஆனால், அன்னையர் தினத்துடன் இருந்த ஒற்றுமைகளின் காரணமாக உடனடியாக இது விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை.

  • தந்தையர் தினத்தை விடுமுறையாக அறிவிக்க 1913 இல் காங்கிரஸில் முதல் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.

  • "தந்தைகளுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் இடையே அதிக நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தவும், அவர்களின் கடமைகளின் முழு அளவையும் தந்தைகள் மீது பதியவும்" எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜ் தந்தையர் தினத்திற்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தில் கையெழுத்திட்டார்,

  • 1966 ஆம் ஆண்டில், ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இந்த விடுமுறையை ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாட வேண்டும் என்று ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

  • ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் கீழ், 1972 இல், தந்தையர் தினத்தை தேசிய விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக மாற்றும் சட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றியது.

சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, சோனோரா தனது 96வது வயதில் இறந்தார்.

தந்தையர் தினத்தை முன்னகர்த்திய இரண்டு சம்பவங்கள்

தி கிரேட் டிப்ரஷன்

அச்சமயத்தில், பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு கருவியாக தந்தையர் தினம் பார்க்கப்பட்டது. தந்தைகள் தங்களுக்காக வாங்கிக்கொள்ளாத பொருட்களை, நாட்டின் பொருளாதாரத்தை காரணம்காட்டி விற்றனர்.

இரண்டாம் உலகப்போர்

அமெரிக்க துருப்பில் முன் நின்று போரிட்ட ஆண்களை ஆதரிக்கவும், தந்தையர்களுக்கு ஆதரவளிக்கவும் இந்நாள் அனுசரிக்கப்பட்டது

மற்ற நாடுகளில் எப்போது கொண்டாடப்படுகிறது?

போர்ச்சுகல், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் மார்ச் 19ஆம் தெதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அங்கு மார்ச் 19ல் செயின்ட் ஜோசப் தினம் அனுசரிக்கப்படுகிறது

தைவானில் ஆண்டின் 8வது மாத்தின் 8வது நாளில் கொண்டாடப்படுகிறது. அதாவது மாண்டரின் சீன மொழியில் 8 என்ற வார்த்தை உச்சரிப்பு "பாபா" என்பது போல ஒலிப்பதால் இந்த நாள் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் முன்னாள் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் பிறந்தநாளான டிசம்பர் 5ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ரஷ்யாவில், தந்தையர் தினம் பிப்ரவரி 23 அன்று கொண்டாடப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?