Pisa: பைசா முதல் பிக் பென் வரை - சாய்ந்திருக்கும் உலக நினைவுச்சினங்கள் ட்விட்டர்
உலகம்

Pisa: பைசா முதல் பிக் பென் வரை - சாய்ந்திருக்கும் உலக நினைவுச்சின்னங்கள்

உலக அதிசயங்கள் ஏழு நினைவுச் சின்னங்களில் பைசா நகரில் இருக்கும் சாய்ந்த கோபுரமும் ஒன்று. ஆனால் உலகில் சாய்ந்திருக்கும் கட்டிடம் பைசா நகர் கோபுரம் மட்டுமல்ல.

Keerthanaa R

உலகில் பல்வேறு விதமான கட்டிடக்கலை பாணிகளை எடுத்துக்காட்டும், நூற்றாண்டுகளாக பல தடைகளை தாங்கி நிற்கும் நினைவுச்சின்னங்கள் ஏராளம். உலக அதிசயங்களாக, உலக பாரம்பரிய சின்னமாக, வரலாற்று சிறப்பு மிக்க தலங்களாக இவை போற்றப்படுகின்றன.

உலக அதிசயங்கள் ஏழு நினைவுச் சின்னங்களில் பைசா நகரில் இருக்கும் சாய்ந்த கோபுரமும் ஒன்று. ஆனால் உலகில் சாய்ந்திருக்கும் கட்டிடம் பைசா நகர் கோபுரம் மட்டுமல்ல.

இன்னும் சில சாய்ந்த கட்டிடங்களும் உள்ளன

டைகர் ஹில் பகோடா

சீனாவில் அமைந்திருக்கிறது இந்த பகோடா பாணியில் கட்டப்பட்டிருக்கிறது இந்த கோபுரம். இது கிபி 960ல் கட்டப்பட்டது. இதனை ஹுகியூ கோபுரம் என்று அழைக்கின்றனர். இந்த கோபுரம் சுமார் 3 டிகிரி வரை சாய்ந்திருக்கிறது

பிக் பென்

லண்டனில் அமைந்திருக்கும் இந்த கோபுரத்தை சற்று உற்றுப் பார்த்தாலே ஒழிய சாய்ந்திருப்பது தெரியாது. மிகவும் குறைந்த டிகிரியில் சாய்ந்திருக்கும் இதனையும், நமது பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

பிரிட்டிஷ் பாராளுமன்றம் அதிகாரப்பூர்வமாக இந்த கட்டிடம் சாய்ந்திர்ப்பதை உறுதிப்படுத்தியது. வடமேற்கில் 0.26 டிகிரி சாய்ந்தவாக்கில் இருக்கிறது. இது 2003க்கு பிறகு, 0.9 டிகிரி சாய்மானம் அதிகரித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன

பொலோகானா இரட்டை கோபுரம்

இத்தாலியில் அமைந்திருக்கும் இந்த இரட்டை கோபுரம், பொலோகோனாவின் அடையாள சின்னங்கள். 1109ஆம் ஆண்டில் தொடங்கி பத்து ஆண்டுகள் கடந்து 1119ல் கட்டி முடிக்கப்பட்டது இந்த இரட்டை கோபுரங்கள். பெரிய கோபுரத்தின் பெயர் அசினெல்லி சிறிய கோபுரதின் பெயர் கரிசெண்டா.

இந்த சிறிய கோபுரம் 4 டிகிரிகள் சாய்ந்துள்ளது

நெவ்யான்ஸ்க் கோபுரம்

ரஷ்ய கட்டிடக்கலை அற்புதமான இது தோராயமாக 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கணிக்கின்றனர். ஆனால் எதற்காக இந்த கோபுரத்தை கட்டினர் என்பது தெரியவில்லை.

சுமார் 3 டிகிரி சாய்ந்திருக்கும் இந்த கோபுரம், சிறையாகவோ கண்காணிப்பு கோபுரமாகவோ இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்

பேட் ஃபிரான்கென்ஹுசென் தேவாலயம்

இந்த தேவாலயத்தின் கோபுரம் 1640ல் சாயத் தொடங்கி, சமீபமாக இதன் சாய்மானம் 4.8 டிகிரியாக உள்ளது. இதனை சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோற்றுள்ளனர். விரைவில் இந்த கோபுரம் இடிந்து விழுந்துவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

பைசா நகர் கோபுரம்

உலக அதிசயமான இந்த கோபுரம் முதல் பாகம் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு சாயத் தொடங்கியது. இது 3.99 டிகிரி சாய்ந்திருக்கிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?