The most expensive beer in history Twitter
உலகம்

வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த பீர்- பின்னணியில் இருக்கும் ஓர் அடடே கதை!

ஆர்க்டிக் கடல் வழியாக அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் வடமேற்கு பாதை வழியாக இரண்டு கப்பல்கள் சென்றது. அந்த பயணத்தின் போது இந்த பீர் பாட்டில் எடுத்து செல்லப்பட்டது. ஆனால் இந்த இரண்டு கப்பல்களும் விபத்துக்குள்ளாகின.

Priyadharshini R

ஓயின் மட்டுமே விலை உயர்ந்த பானங்கள் என்று குடிப்பவர்களின் மத்தியில் பரவலான கருத்து உள்ளது. ஆனால் அது உண்மை அல்ல.

மிகவும் பழமையான ஒயின் பாட்டிலை விட பழமையான பீர் வகைகள் உள்ளன என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

பீரும் உயர்தர சந்தையில் உள்ளது. ஒருவர் ஏல் (ale) என்ற ஒரு வகையான விலையுயர்ந்த பீர் பாட்டிலுக்காக $503,300 செலவழித்திருந்தார். 140 ஆண்டுகளுக்கும் பழமையான உலகின் மிக விலையுயர்ந்த பீராக கருதப்படுவது இந்த 'Allsopp's Arctic Ale'.

இது போன்று மது பானங்கள் சில சிறப்பு பண்புகளைக் கொண்டிருந்தாலும், அதன் தரம் காரணமாக அதன் விலை அதிகமாக இல்லை என்று கூறப்படுகிறது.

Antiques Trade அறிக்கையின் படி, ஓக்லஹோமாவைச் சேர்ந்த ஒருவர் 2007 இல் ஈபேயில் $304 க்கு Allsopp's Arctic Ale பாட்டிலை வாங்கினார்.

இங்குதான் மிகவும் விலையுயர்ந்த பீர் பற்றிய கதை தொடங்கியது. இது மசாசூசெட்ஸ் வணிகரிடம் இருந்து $19.95 டெலிவரி கட்டணத்துடன் வாங்கப்பட்டது.

antiquestradegazette.com இன் படி, அந்த பீர் பாட்டிலுடன் ஒரு பழைய கடிதம் இருந்தது. பீர் 1852 ஆம் ஆண்டில் ஒரு பயணத்திற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டது அந்த கடிதத்தில் இருந்தது.

ஆர்க்டிக் கடல் வழியாக அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் வடமேற்கு பாதை வழியாக இரண்டு கப்பல்கள் சென்றது. அந்த பயணத்தின் போது இந்த பீர் பாட்டில் எடுத்து செல்லப்பட்டது. ஆனால் இந்த இரண்டு கப்பல்களும் விபத்துக்குள்ளாகின.

இந்த கப்பல்களில் பயணித்தவர்கள் பற்றிய எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அவர்களை கண்டுபிடிக்க மீட்புப் பணிகள் அனுப்பப்பட்டன. ஆனால் அந்த குழுவினர் பீர் பாட்டிலை மட்டுமே கண்டுபிடித்து எடுத்து வந்தனர்.

ஏல் பீர் ஏன் சிறப்பு வாய்ந்தது?

உறைபனி குளிர்ந்த ஆர்க்டிக் காலநிலைக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டது தான் இந்த பீர்.

மதுவின் அதிக உள்ளடக்கம் காரணமாக பீர் உறையாமல் இருந்தது.

இறுதியில் eBay இல் பட்டியலிடப்பட்ட இந்த பீர் பாட்டில் 1852 ஆம் ஆண்டில் விற்கப்பட்டது.

அந்த விபத்துக்கு பின்னர் எடுத்துவரப்பட்ட பீர், உலகின் அரிதான பீர் என்றழைக்கப்பட்டது.

eBay இல் இந்த பாட்டிலுக்கு 157 க்கும் மேற்பட்ட ஏலங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அது இறுதியாக ஒருவருக்கு $5,03,300க்கு விற்கப்பட்டது.

வாங்கியவர் பாட்டிலைத் திறந்தாரா அல்லது அப்படியே வைத்திருந்தாரா என்பது குறித்த விவரங்கள் சரியாக தெரியவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?