தங்கத் தண்ணீர்: உலகின் காஸ்ட்லியான குடிநீரின் விலை என்ன? எப்படி தயாரிக்கப்படுகிறது? canva
உலகம்

தங்கத் தண்ணீர்: உலகின் காஸ்ட்லியான குடிநீரின் விலை என்ன? எப்படி தயாரிக்கப்படுகிறது?

எப்படியும் பார்த்தால், ஒரு சராசரி மனிதனாக தண்ணீருக்கு 50 ரூபாய்க்கு மேல் செலவு செய்யமாட்டோம் என வைத்துக்கொள்வோம். ஆனால் இந்த தண்ணீரின் விலை பல லட்சம்! இந்த தண்ணீரை அருந்துபவர்கள் அதிக ஆற்றலுடனும், பளபளப்பான சரும பொலிவுடனும் காணப்படுகின்றனர்!

Keerthanaa R

இயற்கை மனிதர்கள் வாழ அடிப்படையாக தேவைப்படும் விஷயங்களை அளிக்கொடுக்கிறது. முக்கியமாக தண்ணீர்.

ஆனால், நாம் இயற்கையின் வளங்களை சரி வர பயன்படுத்தாததால், தண்ணீரைக் கூட காசுக் கொடுத்து வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

அப்படி நாம் வாங்கும் தண்ணீர் பாட்டிலின் விலை விற்கப்படும் இடத்திற்கு ஏற்ப, அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதன் தேவைக்கு ஏற்ப மாறுபடும்.

அப்படியும் பார்த்தால், ஒரு சராசரி மனிதனாக தண்ணீருக்கு 50 ரூபாய்க்கு மேல் செலவு செய்யமாட்டோம் என வைத்துக்கொள்வோம். ஆனால் இந்த தண்ணீரின் விலை ரூ.45 லட்சம்!

தங்கத் தண்ணீர்

அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிபுடோ மற்றும் மோடிக்லியானி - Acqua di Cristallo Tributo a Modigliani - தண்ணீரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது வாயில் நுழையாத வார்த்தைகளை ஏன் எழுதியிருக்கிரீர்கள் என்றால், இது தான் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான தண்ணீரின் பெயர். இதன் விலை தான் 45 லட்சம் ரூபாய்.

ஏன் 45 லட்சம் என்று கேட்கிறீர்களா?

அதற்கு காரணம் தங்கம் தான்!

ஒரு 750 எம் எல் அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிபுடோ மற்றும் மோடிக்லியானி தண்ணீர் பாட்டில் 24 கேரட் தங்கத்தால் செய்யப்படுகிறது.

இந்த பாட்டிலில் நிறப்பட்டிருக்கும் தண்ணீரிலும் கூட 5 கிராம் 24 கேரட் தங்கம் கலக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் அந்த தண்ணீர் அதிக காரத்தன்மையுடன் இருக்கிறது.

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் இந்த பாட்டிலில் தண்ணீர் குடிப்பதாக கூறப்படுகிறது.

தண்ணீர்

மூன்று தண்ணீர்

இந்த பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து எடுத்துவந்து ஒன்றாக கலக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் பிரான்ஸ், ஃபிஜி நாட்டின் ஊற்றுகள் மற்றும் ஐஸ்லாந்திலுள்ள பனிப்பாறைகளில் இருந்து எடுத்துவரப்படுகிறது. இவை உலகின் சுத்தமான தண்ணீராக கருதப்படுகிறது.

அக்வா டி கிறிஸ்டல்லோ தண்ணீரில், நாம் வழக்கமாக குடிக்கும் தண்ணீரை விட ஆற்றல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

உருவாக்கியது யார்?

பெர்னாண்டோ அல்டமிரானோ அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிப்யூடோ மோடிக்லியானியை உருவாக்கினார்.

கூடுதலாக, அவர் ஹென்றி IV டுடோக்னான் ஹெரிடேஜ் காக்னாக் கொண்ட உலகின் மிக விலையுயர்ந்த தண்ணீர் பாட்டிலை உருவாக்கினார்.

ஹென்றி IV டுடோக்னான் ஹெரிடேஜ் காக்னாக் என்பது உலகின் விலையுயர்ந்த சாம்பெயின்களில் ஒன்று

அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிப்யூடோ மோடிக்லியானியை போலவே ஜப்பானிய காஸ்ட்லி தண்ணீரும் இருக்கிறது. அதன் பெயர் கோனா நிகாரி. இதிலுள்ள தண்ணீர் கடல்மட்டத்திலிருந்து பல ஆயிரம் அடி கீழிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இதிலுள்ள சில குறிப்பிட்ட தாதுக்கள், உடல் எடை குறைக்க உதவவல்லதாக உள்ளன.

அக்வா டி தண்ணீரை அருதுபவர்கள் மற்றவர்களை விட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் மற்றும் அவர்களது சருமம் நல்ல பொலிவுடன் இருக்கிறது.

விலை என்ன?

கடந்த 2010ல் இதன் விலைக்காக கின்னஸ் சாதனைகளில் இடம்பெற்றது அக்வா டி தண்ணீர். அப்போதே இதன் பட்டியலிடப்பட்ட விலை 49 லட்சம்.

தற்போது 750 எம் எல் பாட்டில் ரூ.33,000. ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.44 ஆயிரம். இதில் கடல் நீரில் இருக்கும் இயற்கையான எலக்டிரோலைட்கள் உள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?