தெற்கு சூடான் Twitter
உலகம்

தெற்கு சூடான் : 90% மக்களுக்கு மின்சாரம் இல்லை; தீராத வன்முறை - என்ன நடக்கிறது அங்கே?

Antony Ajay R

வடகிழக்கு ஆப்ரிக்க நாடான தெற்கு சூடான் உலகில் ஏழ்மையான நாடுகளில் ஒன்று. ஏழ்மை காரணமாகத் தொழில்நுட்ப ரீதியிலும் வாழ்வியல் ரீதியிலும் மிக பின் தங்கியிருக்கிறது. எந்த அளவு என்றால் அந்நாட்டில் 90 விழுக்காட்டுக்கும் மேலான மக்கள் இன்னும் மின்சார சேவை கூட இல்லாமல் இருக்கின்றனர்.

இந்த நவீன யுகத்திலும் இப்படி ஒரு நாடு இருக்க முடியுமா? இது உண்மைதானா என்றால்… ஆம். தெற்கு சூடானில் 2020ம் ஆண்டு அறிக்கைப்படி வெறும் 7.2% மக்கள் மட்டுமே மின்சார வசதி பெற்றிருக்கின்றனர். அந்நாட்டு மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 12 லட்சத்தில் 80% பேர் கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். அவர்களில் பலர் வாழ்நாளில் மின் விளக்கையே பார்த்திருக்க மாட்டார்கள்.

ஒரு நாட்டின் தொழில் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் போன்றவற்றுக்கு போதிய மின்சாரம் இருக்க வேண்டியது அவசியம் ஆனால் சூடானின் நிலையோ மிகப் பரிதாபம். அந்த மக்களின் வாழ்க்கைத் தேவைக்குக் கூட அங்கு மின்சாரம் கிடையாது.

போராட்டம்

தெற்கு சூடான் உலகின் மிகப் புதிய நாடுகளில் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு சூடானிலிருந்து பிரிந்த போதே இங்கு மின்சார உற்பத்தி மிக குறைவாகத் தான் இருந்தது. மின்சார உற்பத்திக்காக இருந்த நிலையங்கள் பலவும் போரில் உள்நாட்டுப் போரில் சூறையாடப்பட்டிருக்கின்றன.

மின்சார வாரியத்தின் சார்பில் நீர்மின் நிலையங்கள், டீசல் ஜெனரேட்டர்கள், சோலார் பேனல் மூலம் சுமார் 200 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. வசதி படைத்த மக்கள் சோலார் பேனல் மற்றும் ஜெனரேட்டர்கள் மூலம் தனியாகவே மின்சாரம் உற்பத்தி செய்து தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

மின் உற்பத்தி குறைவாக இருப்பதால் மின் மின் கட்டணம் மிக அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் மின்சாரம் பணக்காரர்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. பெரும் பணக்காரர்கள் சோலார் தட்டுகள் மூலம் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். ரிக்‌ஷா உள்ளிட்ட சில வாகனங்களில் சோலார் தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யடுகிறது. ஏனெனில் பெட்ரோல் அதைவிட அதிக விலை.

தெற்கு சூடான்

மின்சார வசதி இல்லாததால் அங்கு தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் மிகக் குறைவே. 10 -12 விழுக்காடு மக்கள் மட்டுமே செல்போன் உபயோகிக்கின்றனர். சில கிராமங்களுக்கு ஒரு சார்ஜிங் சென்டர் இருக்கிறது. 10, 20 கிலோமீட்டர் நடந்து சென்று காத்திருந்து சார்ஜ் செய்கின்றனர்.

நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வறுமையும் போராட்டங்கள் அம்மக்களின் வாழ்வை சிதைத்துக் கொண்டிருக்கிறது.

மின்சாரம் மட்டுமே தெற்கு சூடானின் முக்கியப் பிரச்சனை இல்லை.

அங்குள்ள இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல், அதனால் ஏற்பட்டும் கலவரங்கள், அரசுக்கு எதிரான அமைப்புகள், தீவிரவத இயக்கங்கள், தீவிரவாதத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகள், இன ரீதியில் பிளவுபட்ட இராணுவம் என வன்முறை சூழ கழிந்துகொண்டிருக்கிறது சூடான் மக்களின் வாழ்க்கை.

இந்த காரணங்களால் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணவு இன்றித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்டை நாடான எத்தியோப்பியா சூடானுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை எடுக்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

the boy who harnessed the wind என்ற ஆப்ரிக்க திரைப்படத்தில் மக்கள் தண்ணீர் பஞ்சத்தினால் விவசாயம் செய்ய முடியாமல் பசியில் வாடி, பசியும் வறுமையும் வன்முறையை இழுத்து வர இறுதியில் ஒரு பள்ளிச் சிறுவன் மின் சாரத்தை உருவாக்கி மோட்டார் மூலமாக நிலத்துக்கடியிலிருந்து தண்ணீர் எடுத்து அந்த ஊரின் தண்ணீர் தேவையை நிறைவு செய்து பிரச்சினைகளைத் தீர்ப்பதாகப் படம் முடியும். எத்தியோப்பியா வழங்கும் இந்த மின்சாரம் அது போல சூடனிலிருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க ஆரம்பமாக இருக்கும் என அந்த நாட்டு மக்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?