Travel : ஆரவல்லி முதல் கருப்பு மலை வரை - உலகின் பழமையான மலைகள் குறித்து தெரியுமா?  Twitter
உலகம்

Travel : ஆரவல்லி முதல் கருப்பு மலை வரை - உலகின் பழமையான மலைகள் குறித்து தெரியுமா?

இமயமலை இந்தியர்களின் புனித ஸ்தலமாகவும் கருதப்படுகிறது. தற்போது உயரும் புவி வெப்ப நிலைகாரணமாக இமயமலை உருகி பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Priyadharshini R

மலைகள் என்றாலே எப்போதும் அழகுதான் பல ஆண்டுகளாக மனிதனுக்கும் மலைக்கும் பல தொடர்புகள் உள்ளன. உலகின் பழமையான மலைகள் குறித்து தற்போது காணலாம்.

மாசிஃப் சென்ட்ரல்

ஐரோப்பாவின் பழமையான மலையாக அறியப்படும் மாசிஃப் சென்ட்ரல் மலையானது சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது என கூறப்படுகிறது.

ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க டெக்டோனிக் தட்டுகள் ஒருமுறை மோதியபோது உருவானதாகக் கருதப்படுகிறது.

இதில் இன்றும் செயலற்ற நிலையில் 450 எரிமலைகள் உள்ளன இவை அணைத்தும் பூமியில் கண்டங்கள் மோதிய போது உருவானவை ஆகும்.

ஆரவல்லி மலைத்தொடர்

இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடரும், உலகின் மிகப் பழமையான மலைத்தொடருமான ஆரவல்லி மலைத்தொடர் தென்மேற்கு இந்தியா முழுவதும் 430 மைல்கள் (சுமார் 690 கிமீ) நீண்டுள்ளது.

ஆரவல்லி மலைத்தொடர் சுமார் 350 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை.

ப்ளூ ரிட்ஜ் மலைகள்

பெயருக்கு ஏற்றார் போல் இந்த மலைகளை தொலைவில் இருந்து பார்க்கும் போது உண்மையில் நீல நிறத்தில் ஒளிரும்.

அழகான ஓக் மற்றும் ஆஸ்பென் மரங்களால் வெளியிடப்படும் ஐசோபிரீன் என்ற குறிப்பிட்ட ஹைட்ரோகார்பன் இதற்குக் காரணம். தூரத்தில் இருந்து பார்க்கும் போது, இந்த ஹைட்ரோகார்பன் ப்ளூ ரிட்ஜ் மலைகளை நீல நிற மூட்டமாக நமக்கு காண்பிக்கின்றது.

பிலானெஸ்பெர்க் மலை

பூமியின் மிகப் பழமையான மலைகள் பல தென்னாப்பிரிக்காவில் உள்ளன, அவற்றில் ஒன்று பிலானெஸ்பெர்க் மலை. இந்த மலை பகுதியானது 1.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.

கருப்பு மலை

வட அமெரிக்காவின் பழமையான மலைபகுதியான இந்த மலைத்தொடர், மனித குடியேற்றத்தின் தொடக்கத்திலிருந்து பல பூர்வீக அமெரிக்க பழங்குடியினரால் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த மலையானது 1.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை, அவை வட அமெரிக்காவின் பழமையான மலைகள் என கூறப்படுகின்றது.

இமயமலை

இமயமலை சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மற்றும் யூரேசிய நிலப்பரப்புகளின் வியத்தகு மற்றும் பேரழிவு மோதல்களால் உருவானது என கூறப்படுகிறது.

இது இந்தியர்களின் புனித ஸ்தலமாகவும் கருதப்படுகிறது. தற்போது உயரும் புவி வெப்ப நிலைகாரணமாக இமயமலை உருகி பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?