கெட்ச்அப்புக்கு அறிமுகம் தேவையில்லை, இது நமது அன்றாட உணவில் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
மொறுமொறுப்பான பொரியல்களை ருசிப்பது முதல் பிரட், பீட்சா உண்ணும்போது வரை, தக்காளி கெட்ச்அப் கம்போ கண்டிப்பாக இடம்பெறுகிறது.
ஆனால் இந்த இனிப்பு புளிப்பு சாஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது மருந்தாகவா? கெட்ச்அப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்.
கெட்ச்அப்பின் தோற்றம் சீனாவில் இருக்கலாம் என்று உணவு வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள் நம்புகிறார்கள்.
முதலில் இது Ge-thcup அல்லது Koe-cheup என அறியப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் சீனர்கள் மீன் ஊறுகாயையும், வாசனைப் பொருட்களையும் கலந்து செய்த ஒரு துணை உணவை “கே-சியாப்” அல்லது “கோஏ-சியாப்” என அழைத்தனர்.
இது “மீன் ஊறுகாய்ச் சாறு” என்று அறியப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் இந்த கெட்சப் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்றது.
அங்கேயே ஆங்கிலேயக் குடியேற்றவாதிகளுக்கும் இதன் அறிமுகம் கிடைத்தது. இந்தச் சுவைச் சாற்றுக்கான மலேசிய மலாய் மொழிச் சொல் ‘’கிச்சப்’’ அல்லது ‘’கேச்சப்’’ என்பதாகும். இதுவே ஆங்கிலத்தில் ‘’கெச்சப்’’ ஆனது.
1736 வாக்கில், சாஸ் செய்முறையில் இன்னும் சில மாற்றங்களை கொண்டு வந்தனர். இது இரண்டு குவார்ட்ஸ் பழைய பீர் மற்றும் அரை பவுண்டு நெத்திலிகளை வேகவைத்து தயாரிக்கப்பட்டது.
இது புளிக்கவைக்கப்பட்டு பின்னர் சாஸாக ருசிக்கப்பட்டது. இந்த செய்முறையை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றபோது இந்த செய்முறை மேலும் மாற்றங்களுக்கு உட்பட்டது.
இதில் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 1812 இல், ஜேம்ஸ் மீஸ் என்ற அமெரிக்கர் தக்காளி அடிப்படையிலான கெட்ச்அப்பை உருவாக்கினார்.
தக்காளி ஒரு பாலுணர்வு உணவு என்று நம்பப்பட்டது. இது காதல் ஆப்பிள் என்றும் அறியப்பட்டது. இந்த செய்முறையிலும் ஆல்கஹால் சேர்க்கபட்டன.
இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹென்றி ஹெய்ன்ஸ், பழுத்த தக்காளி, காய்ச்சி வடிகட்டிய வினிகர், பிரவுன் சர்க்கரை, உப்பு மற்றும் பலவிதமான மசாலாப் பொருட்களுடன் தக்காளி கெட்ச்அப்பின் இன்றைய பதிப்பைக் கொண்டு வந்தார்.இது தக்காளி கெட்ச்அப் என பதிவு செய்யப்பட்டது.
பல உணவு அறிக்கைகள், 1834 ஆம் ஆண்டில் டாக்டர் ஜான் குக் பென்னட் என்பவரால் கெட்ச்அப்பில் தக்காளி சேர்க்கப்பட்டது எனவும் கூறுகின்றன.
தக்காளியில் பெக்டின், லைகோபீன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இருந்துள்ளது. அவை சக்திவாய்ந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன.
இந்த தக்காளி கலவையானது வயிற்றுப்போக்கு, அஜீரணம், வாத நோய் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் என்று டாக்டர் பென்னட் கூறினார். இந்த யோசனை மிகவும் பிரபலமானது, கெட்ச்அப் கலவை பின்னர் மாத்திரைகளாக உருவாக்கினார். இது ஒரு மருந்தாக விற்கப்பட்டது.
இந்த தக்காளி சாறு மாத்திரைகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி, மருந்து தயாரிப்பாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
ஆனால் படிப்படியாக இந்த மாத்திரைகள் தக்காளி உள்ளடக்கம் இல்லாமல் தரமற்ற வழிகளில் உருவாக்கப்பட்டன.
இது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இது தக்காளி மாத்திரைகளின் சாம்ராஜ்யத்தின் முடிவுக்கு இட்டுச் சென்றது. தக்காளி கெட்சப் உணவாக தன்னிடத்தை நிலைநிறுத்திக்கொண்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust