These 6 Countries Have Changed Their Names For Various Reasons Twitter
உலகம்

ஈரான் முதல் இலங்கை வரை : பெயரை மாற்றிகொண்ட நாடுகள் - என்ன காரணம் தெரியுமா?

Priyadharshini R

உலகில் தற்போது 195 நாடுகள் உள்ளன.அவற்றில் பல நாடுகள் தங்கள் நாட்டின் பெயர்களை மாற்றியுள்ளது.

எல்லை மாற்றம், போர்,சுதந்திரம், ஒரு தலைவரை கவுரவிப்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக நாடு பெயரை மாற்றியுள்ளது.

பெரும்பாலான நாடுகள் சுற்றுலாவை ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. அப்படி பெயர்களை மாற்றிக்கொண்ட நாடுகள் குறித்தும், எதற்காக என்பது குறித்தும் இங்கே தெரிந்துகொள்வோம்.

பெர்சியா டு ஈரான்

பெர்சியா என்பது மார்ச் 1935 க்கு முன்னர் மேற்கத்திய உலகில் ஈரானின் அதிகாரப்பூர்வ பெயராகும்.

1935 ஆம் ஆண்டில், ஈரானிய அரசாங்கம் ராஜதந்திர உறவுகளைக் கொண்டிருந்த நாடுகளிடம் பெர்சியாவை "ஈரான்" என்று அழைக்குமாறு கோரியது.

இது பாரசீக மொழியில் நாட்டின் பெயர் என்று கருதப்படுகிறது. நாஜிகளின் செல்வாக்கின் கீழ் வந்த ஜெர்மனிக்கான ஈரானிய தூதரிடம் இருந்து இந்த மாற்றத்திற்கான பரிந்துரை வந்ததாக கூறப்படுகிறது.

சியாம் டு தாய்லாந்து

பிரெஞ்சுக்காரர்களால் காலனித்துவப்படுத்தப்படாத சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தாய்லாந்து ஒன்றாகும். பல நூற்றாண்டுகளாக, இப்பகுதி ஒரு மன்னரால் ஆளப்பட்டது,

ஆரம்பத்தில் சியாம் என்று அழைக்கப்பட்டது. 1939 ஆம் ஆண்டில், நாட்டை ஆண்ட மன்னர் அரசியலமைப்பு முடியாட்சியாக மாறிய பிறகு அதன் பெயரை மாற்றினார்.

பர்மா டு மியான்மர்

முதலில் பர்மா என்று அழைக்கப்பட்ட, நாடு ஆளும் இராணுவ ஆட்சிக்குழு மக்கள் எழுச்சியை அடக்கியதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, 1989 இல் அதன் பெயரை மியான்மர் என மாற்றியது.

இந்த மாற்றத்தை ஐக்கிய நாடுகள் சபையும், பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளும் அங்கீகரித்தன. ஆனால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அங்கீகரிக்கவில்லை.

ஹாலந்து டு நெதர்லாந்து

நெதர்லாந்து நாடு முன்னதாக ஹாலந்து என்று தான் அறியப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா வரும் பயணிகள் இரண்டு ஹாலந்து மாகாணங்களை மட்டுமே சுற்றிப்பார்த்தனர். நாடுமுழுவதும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காக நெதர்லாந்து என பிராண்ட் செய்தனர்.

ஐரிஷ் சுதந்திர நாடு டு அயர்லாந்து

1922 ஆம் ஆண்டில், ஆங்கிலோ-ஐரிஷ் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து டொமினியன் அந்தஸ்துடன் ஐரிஷ் சுதந்திர அரசு உருவாக்கப்பட்டது.

அதன் பின்னர் ஒரு புதிய அரசியலமைப்பு 1937 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி ஐரிஷ் சுதந்திர அரசு அயர்லாந்து என மறுபெயரிடப்பட்டது.

சிலோன் டு இலங்கை

1505 ஆம் ஆண்டில், போர்த்துகீசியர்கள் சிலோன் என்ற பண்டைய இலங்கையைக் கண்டுபிடித்தனர். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரிட்டிஷ் பேரரசு அதன் பெயரை சிலோன் என்று மாற்றியது. சுதந்திரத்திற்குப் பிறகு, தீவு அரசாங்கம் அதன் பெயரை இலங்கை என்று மாற்றியது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?