These incredible forests will leave you wanting for more Twitter
உலகம்

உலகின் அமானுஷ்யமான பேய் பிடித்த 5 காடுகள் குறித்து தெரியுமா?

கிராமத்திலும், நகரத்திலும் சரி, பேய்கள் வாழும் இடம் மரங்களும், காடுகள் என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் உங்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய சில மர்மமான காடுகள் குறித்து காண்போம்.

Priyadharshini R

இந்த நவீன உலகத்திலும் நம்மை சுற்றி பல கேள்விகள் இருக்கின்றன. அந்த வகையில் மனிதனை பல காலமாக துரத்தும் கேள்விதான் பேய் இருக்கா? இல்லையா? இன்று வரை இதற்கான பதில் கிடைக்கவில்லை.

அதே சமயம் கிராமம் தொடங்கி நகரம் வரை பேய்கள் வாழும் இடம் மரங்களும், காடுகள் என்று கூறப்படுகின்றது.

அந்த வகையில் உங்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய சில மர்மமான காடுகள் குறித்து காண்போம்.

வைச்வுட் காடு

இங்கிலாந்தில் உள்ள வைச்வுட் காடு ஆஸ்போர்டுஷைரில் உள்ளது. இந்த காட்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது அதாவது இங்கு ஒரு பெண்ணின் ஆவி அனைவரையும் வேட்டையாடுவதாக நம்பப்படுகிறது.

லெய்செஸ்டர் ஏர்லின் மனைவியான ஏமிராப்சார்ட்டின் என்பவர் இந்த காட்டில் மர்மமான முறையில் இறந்துவிட்டராம், அவர் இறந்தது 1950, இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுகள் கழித்து ஏமியின் கணவர் வேட்டைக்கு சென்று உள்ளார்.

அங்கு அவர் தனது மனைவியின் ஆவியை பார்த்தாகவும் சிறிது நேரத்திலேயே இறந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆகவே இங்கு காட்டிற்கு வரும் நபர்களை எல்லாம் ஏமிராப்சார்ட்டின் பேய் கொள்வதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

பிளாக் ஃபாராஸ்ட்

ஜெர்மனியில் உள்ளது இந்த பிளாக் ஃபாராஸ்ட்.

இங்கு ஃபிடர் மரங்கள் அதிமாக இருப்பதால் இந்த காடுகளில் சூரிய ஒளியினை பார்க்க முடியாது. இந்த காடு குறித்த ஒரு பேய் கதை உலா வருகிறது.

தலையில்லா முண்டமாக வரும் குதிரைக்காரரின் ஆவி காடுகளை வேட்டையாடுவதாக நம்பப்படுகிறது.

அந்த ஆவி பெண்களை பிடித்து அவர்களை நீருக்கு அடியில் எடுத்து செல்வதாக கூறப்படுகின்றது.

ஹோயா- பேசியு காடு

ருமேனியாவின் திரான்சில்வேனியாவில் அமைந்துள்ளது ஹோயா பேசியு காடு.

இந்த பகுதியில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

1968 ல் இந்த காடுகளின் மீது ஏலியன்கள் தரையிறங்கியதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த காட்டிற்கு சென்ற பலர் காணமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காடு இன்று வரை மர்மம் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது.

டவ் ஹில் ஃபாரஸ்ட்

இந்தியா மேற்கு வங்காளத்தில் உள்ள குர்சியோங் என்ற நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள டவ் ஹில் இந்தியாவில் பார்க்க வேண்டிய மர்மமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

.அங்கு இருக்கும் வனப்பகுதி அமானுஷ்ய மர்மங்களால் நிறைந்துள்ளது. மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் பல கொலைகள் நடந்ததாக கூறப்படுகிறது.

அகிகஹாரா காடு

ஜப்பானில் இருக்கும் இந்த காட்டினை தற்கொலைக்காடு என்று அழைக்கின்றனர்.

இதற்கு காரணம் இந்த புள்ளிவிவரங்கள்தான் 2010ல் மட்டும் இதில் 247 பேர் தற்கொலைக்கு முயற்ச்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே இந்த காடு அமானுஷ்யங்கள் நிறைந்த பகுதியாக பார்க்கப்படுகின்றது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?