உங்கள் மொபைல் tap செய்யப்பட்டுள்ளதா? தெரிந்துகொள்ள 7 வழிகள் Canva
உலகம்

உங்கள் மொபைல் tap செய்யப்பட்டுள்ளதா? தெரிந்துகொள்ள 7 வழிகள்

இன்று எல்லோர் கையிலும் இருக்கும் ஒரு கருவி மொபைல்ஃபோன். அதிலும் நாம் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் பேசிக் மாடல் ஸ்மார்ட் ஃபோனாவது இருக்கும். நம் ஸ்மார்ட் ஃபோனை டாப் (tap) செய்தால் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்துமே இந்த ஃபோனில் இருந்து எடுத்துவிடலாம்.

Keerthanaa R

தங்கு தடையின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்த நவீன உலகில் எல்லாமே டிஜிட்டல் மயமாகி விட்டது. கிட்ட தட்ட நம் அன்றாட வேலைகள் உட்பட அனைத்திற்குமே அறிவியல் மாற்று வந்துவிட்டது.

மனிதனுக்கு மாற்றாக டெக்னாலஜி வந்தது ஒரு பக்கம் வளர்ச்சியை குறித்தாலும் மற்றொரு பக்கம் இதனால் ஆபத்தும் இருக்கிறது என்பதை நாம் புறந்தள்ள முடியாது.

இன்று எல்லோர் கையிலும் இருக்கும் ஒரு கருவி மொபைல்ஃபோன். அதிலும் நாம் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் பேசிக் மாடல் ஸ்மார்ட் ஃபோனாவது இருக்கும். நம் ஸ்மார்ட் ஃபோனை டாப் (tap) செய்தால் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்துமே இந்த ஃபோனில் இருந்து எடுத்துவிடலாம்.

அப்படி நம் ஸ்மார்ட்ஃபோன் டாப் செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிந்துகொள்வது?

பேட்டரி டிரெயின் ஆவது அல்லது அதிக சூடாவது

தற்போது உற்பத்தியாகும் ஃபோன்களின் பேட்டரிகள் குறைந்தது ஒன்றரை முதல் இரண்டு நாட்களுக்கு சார்ஜ் தாங்கும். அதன் பின்னர் நம் உபயோகம், மற்றும் சார்ஜிங் செய்யும் சுழற்சியின் அடிப்படையில் இது மாறுபடும்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிகமான சார்ஜ் போகிறது என்றாலோ, அல்லது பயன்படுத்தாத நேரத்திலும் அதிகமாக சூடாகிறது என்றாலோ அது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

malicious software ஏதாவது நமக்கே தெரியாமல் நம் தரவுகளை பரிமாற்றிக்கொண்டிருக்கலாம். இதனால் உங்கள் ஃபோனின் அப்களை சரிபார்த்து தேவையில்லாதவற்றை நீக்கிவிடுங்கள்

ஃபோன்கால் பேசும்போது சத்தம்

நாம் யாருடனாவது ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும்போது எப்போதாவது கிராஸ் டாக் வரும். ஆனால் அப்படியில்லாமல் ஹை பிட்சில் ஏதாவது சத்தம், க்ளிக் செய்வது போன்ற சத்தங்கள் எழுந்தால் ஃபோன் டாப் செய்யப்படுவதை அது குறிக்கிறது.

நாம் பேசுவதை யாராவது ரெக்கார்ட் செய்துகொண்டிருக்கலாம், அல்லது அதிகாரப்பூர்வமற்ற கால் ஃபார்வார்டிங் சிக்னலாக இருக்கலாம்.

ஸ்விட்ச் ஆஃப் செய்வதில் சிக்கல்

நம் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்வதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது அடிக்கடி ஃபோன் தானாக ரீஸ்டார்ட் ஆகிறது என்றாலோ நம் ஃபோன் டாப் செய்யப்பட்டிருக்கலாம்.

வெப் பேஜில் மாற்றம்

எப்போதும் இணையத்தில் ஏதாவது ஒரு விஷயம் தேடுகிறீர்கள் என்றால் நாம் வழக்கமாக பார்க்கும் வெப்சைட் தானா என்பதை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

நிஜமான வெப் சைட் போலவே டிசைன் செய்து வைத்திருப்பார்கள். அதனால் அந்த பேஜ் வேலை செய்யும் விதத்தை கவனித்துபாருங்கள்

மர்மமான டெக்ஸ்ட் மெசேஜுகள்

நம் செல்ஃபோன் நம்பர் பலருக்கும் பல மர்மமான முறையில் பகிரப்படுகிறது. அடிக்கடி நன்கொடை கேட்டும் லோன் வேணுமா சார் என்று கேட்டும் கால்கள் வருகிறதே?!

அல்லது இது போன்ற குறுஞ்செய்திகள் கூட வரலாம். அப்படி ஏதேனும் குறுஞ்செய்திகள் வந்தால் அதுவும் நம் ஃபோன் டாப் செய்யப்படுவதற்கான அறிகுறி தான்.

அந்த நம்பர்களை பிளாக் செய்யுங்கள், உங்கள் தரவுகளை பாதுகாத்து வையுங்கள்

கேமரா மற்றும் மைக்ரோஃபோன்

நமது அனுமதியில்லாமல் நம் செல்ஃபோன் கேமராவோ அல்லது மைக்ரோஃபோனோ ஆன் ஆகிறது என்றால் அது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

இதுவும் தேவையில்லாத ஆப்களின் காரணமாக இருக்கலாம். அதனால் அவற்றை டிலீட் செய்யுங்கள். எந்தெந்த ஆப்கள் உங்கள் தரவுகளை சேகரிக்கலாம் என்பதை ஆராய்ந்து அனுமதி கொடுங்கள்

அதிகபடியான டேட்டா பயன்பாடு

உங்கள் மொபைல் டேட்டா அளவுக்கு அதிகமாக செலவாகிறது என்றால் கொஞ்சம் கவனம் வையுங்கள். இது ஸ்பைவேரின் காரணமாக இருக்கலாம்.

ஸ்மார்ட் ஃபோன்களில் டேட்டா அதிகமாக பயன்படுகிறது என்றால் வார்னிங் கொடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதனை ஆன் செய்து வையுங்கள். இங்கள் சொந்த பயன்பாட்டிற்கு இவ்வளவு டேட்டா போதும் என்பதை நீங்கள் வரையறுத்து வைத்திருந்தாலே இதனை மேனேஜ் செய்துவிடலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?