ஏடிம் லீடர்போர்ட் ட்விட்டர்
உலகம்

”யாரிடம் அதிக பணம் உள்ளது” - Bank Balanceஐ பட்டியலிட்டு ஊருக்கே காட்டும் ஏடிஎம் மெஷின்!

Keerthanaa R

வங்கி கணக்கில் ஒவ்வொருவரும் எவ்வளவு பணம் வைத்திருக்கின்றனர் என்பதை காட்டும் விதமாக ATM ஒன்று நியூயார்க்கில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஃப்ளோரிடாவின் மியாமி பீச்சில் ஆர்ட் பேசல் 2022 என்ற கலை கண்காட்சி நடக்கிறது. அங்கு தான் இந்த தரவரிசைப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கை தளமாக கொண்ட MSCHF கலைக் கூடம் தான் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

பணம் எடுக்கும் ATM மெஷினில் மக்களின் புகைப்படங்களுடன் கூடிய தரவரிசைப் பட்டியல் ஒன்று காட்சியளிக்கப்பட்டுள்ளது.

அதில் யாருடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வைத்திருப்பவர் முதல் குறைவாக வங்கி இருப்பு வைத்திருப்பவர்கள் வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் ஏடிஎம் மெஷினில் பொறுத்தப்பட்டுள்ள கேமராக்களில் எடுக்கப்பட்டவை.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவரின் வங்கி இருப்பு, டிசம்பர் 1 ஆம் தேதியன்று 2.9 மில்லியன் டாலர்கள். இவர் கடந்த செவ்வாய் முதலே தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்.

MSCHF இன் இணை நிறுவனர் டேனியல் கிரீன்பெர்க் CNN இடம் கூறுகையில், “இந்த ஏடிஎம் லீடர்போர்ட் என்பது, தங்களது செல்வத்தை உலகுக்கு காட்ட வேண்டும் என்ற உந்துதலின் ஒரு ஆடம்பர முயற்சியாகும்” என்றார்.

மேலும் இந்த ஏடிஎம்மை காட்சிப்படுத்தவேண்டும் என்ற யோசனை தோன்றியது முதலே அதனை மியாமி கடற்கரையில் தான் வைக்கவேண்டும் என்ற முடிவில் நிறுவனம் இருந்ததாக டேனியல் தெரிவித்திருக்கிறார்.

மியாமி கடற்கரையில் லம்போர்கினி கார்களும், கையில் மின்னும் ரோலக்ஸ் வாட்ச்களுடனும் மக்களை அதிகம் பார்க்க முடியும் என்பதால் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தாகவும் அவர் தெரிவித்தார்.

“இது ஏடிஎம் லீடர்போர்டை வைக்க ஒரு மறைமுக குறியீடாக இருந்தது” என்றார் டேனியல்

இந்த ஏடிஎமின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு, யாருடைய பணம் முதலில் திருடுப்போகும் என நகைச்சுவையாக விவாதித்து வருகின்றனர்.

மற்றொரு புறம் இது அவர்களின் பிரைவசியை குலைக்கும் விதமாக உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.

இந்த MSCHF நிறுவனம் தான் முன்னர் ஒருமுறை ஜெஃப் பெசாஸ், எலான் மஸ்க் போன்றவர்களின் முகங்களை கொண்டு ஐஸ்கிரீம் வடிமைத்திருந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?