Travel: 22,000 கி.மீ, 6 டைம் சோன், 17 நாடுகள்; உலகின் மிக நீண்ட நடைப்பாதை இது தான்- எங்கே? Twitter
உலகம்

Travel: 22,000 கி.மீ, 6 டைம் சோன், 17 நாடுகள்; உலகின் மிக நீண்ட நடைப்பாதை இது தான்- எங்கே?

நடைப்பயணமாக பயணப்பிரியர்கள், நெடுந்தூரம் உலகின் மூலை முடுக்குகளுக்கு பயணித்திருந்தாலும், ஒரு இடம் மட்டும் இன்னும் முழுதாக கடக்கப்படவில்லை. தொடு வானம் போல நீளும் சாலைவழிப் பயணம் ஒன்று இருக்கிறது.

Keerthanaa R

பயணங்களில் மிக அழகானது நடைப்பயணம். போக்குவரத்து சமாச்சாரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, எவ்வளவு நீண்ட தூரமானாலும் மனிதர்கள் நடந்தே தங்கள் இலக்குகளை அடைந்தனர்.

நமக்கு பிடித்தவர்களுடன் நாம் செல்கிறோம் என்றால், “உன்னோடு நானும்... போகின்ற பாதை... இது நீளாதோ” என்று பாடத்தோன்றும்.

நடைப்பயணமாக பயணப்பிரியர்கள், நெடுந்தூரம் உலகின் மூலை முடுக்குகளுக்கு பயணித்திருந்தாலும், ஒரு இடம் மட்டும் இன்னும் முழுதாக கடக்கப்படவில்லை. தொடு வானம் போல நீளும் சாலைவழிப் பயணம் ஒன்று இருக்கிறது.

தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் மாகாணத்திலிருந்து, கிழக்கு ரஷ்யாவிலுள்ள துறைமுக நகரமான மகடன் வரைச் செல்ல சாலைவழி மார்க்கம் இருக்கிறது.

இது உலகின் மிக நீண்ட நடைப்பாதை என அறியப்படுகிறது. இதன் தூரம் 22,000 கி.மீக்கும் அதிகம். இது மிகவும் கடினமான நடைப்பாதையாக இருக்கிறது.

எனினும், இவ்வழியாக பயணம் மேற்கொள்பவர்கள், கார்களோ, விமானமோ அல்லது படகோ முன்பதிவு செய்ய தேவையில்லாத வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது.

கேப் டவுனில் தொடங்கி ரஷ்யாவின் மகடனை அடையும் வரை, வழி நெடுக அழகிய காட்சிகள், சுவாரஸ்யமான, ஆபத்து மிகுந்த பகுதிகளையும் கடக்கவேண்டியிருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். எண்ணற்ற பாலங்கள், சாலைகள் பயணிப்பவர்களை ஆப்ரிக்கா வழியாக மொத்தம் 17 நாடுகளை கடக்கச் செய்கிறது. சுமார் 6 டைம் சோன்களை நாம் கடக்கலாம்.

இடைவிடாது நடந்தால், ஒருவர் இந்த தூரத்தை கடந்து இலக்கை அடைய (கேப் டவுன் டு மகடன் அல்லது மகடன் டு கேப் டவுன்) 187 நாட்கள் ஆகும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர். ஒரு வேளை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் நடந்தால், 562 நாட்களில் நாம் இலக்கை அடையலாம்.

எளிதாக கூறவேண்டும் என்றால், எவரஸ்ட் சிகரத்தை 13 முறை ஏறி இறங்குவதற்கு சமம் இந்த ஒற்றைப்பயணம்

இருப்பினும் எட்டாக் கனியாகவே இருக்கிறது இந்த பயணம். கடந்த திங்களன்று ஏற்பட்ட துருக்கி சிரியா நிலநடுக்கத்தில் இவ்வழிப்பாதை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்வென்சர் பயணத்தை மேற்கொள்ள நீங்கள் தயாரா? உடன் யாரை அழைத்து செல்வீர்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?