This lady is facing a Rs 19 lakh fine for a single pink door in her house  Twitter
உலகம்

வீட்டில் வைத்த பின்ங் நிற கதவு : இளம் பெண்ணுக்கு ரூ.19 லட்சம் அபராதம் - என்ன காரணம்?

Priyadharshini R

48 வயதான மிராண்டா டிக்சன் என்ற பெண்மணி தனது வீட்டின் கதவுக்கு இளஞ்சிவப்பு வண்ணம் பூசியதற்காக ரூ.19 லட்சம் அபராதம் செலுத்தவுள்ளார். எதற்காக இந்த அபராதம்? வாங்க பார்க்கலாம்...

ஸ்காட்லாந்து நாட்டின் தலைநகரான எடின்பரோவின் நியூ டவுன் பகுதியில் வசித்து வருபவர் மிராண்டா டிக்சன்.

48 வயதான இவர் தற்போது தனது பரம்பரை வீட்டில் வசித்து வருகிறார். 1981 ஆம் ஆண்டு இவரது பெற்றோரால் இந்த வீடு வாங்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே இரண்டு பிள்ளைகளின் தாயான மிராண்டாவின் பெற்றோர் மரணமடைந்த பிறகு, கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த வீட்டை புதுப்பிக்க நினைத்துள்ளார்.

இதன்படி அந்த வீட்டை புரனமைத்து, பெயிண்ட் எல்லாம் அடித்து மிராண்டா டிக்சன் குடும்பம் அங்கு குடியேறியது. எடின்பர்க் நகர கவுன்சில் மிராண்டாவிற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது.

அதில், நகரத்தின் பாரம்பரிய முறைகளுக்கு எதிராக வீட்டின் முன்பக்க கதவுகளுக்கு பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. விதிமுறைகளின்படி வீட்டின் கதவு அடர் நிறத்தில் இருக்க வேண்டும்.

மேலும், உலக பாரம்பரிய இடமாக திகழும் பகுதியின் விதிமுறைகளை மிராண்டா மீறியதாக கூறி 20 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 19 லட்ச ரூபாய்) அபராதமும் விதித்திருக்கிறது அமலாக்கத்துறை.

இந்த வீடு எடின்பர்க் நியூ டவுனின் உலக பாரம்பரியப் பாதுகாப்புப் பகுதியில் அமைந்துள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள சொத்துக்களில் என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம் என்பதில் சில விதிகள் உள்ளன.

எடின்பரோவின் பழைய மற்றும் புதிய நகரங்கள் 1995 இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அந்தஸ்தைப் பெற்றன.

இது குறித்து மிராண்டா டிக்சன் கூறுகையில்

தனது வீட்டிலிருந்து ஒரு "ஐந்து நிமிட" நடைப்பயணத்தில் அக்கம்பக்கத்தில் இருக்கும் வீடுகள் மட்டும் பிரகாசமாக வர்ணம் பூசப்பட்டிருக்கிறது.

இதில் கசப்பான விஷயம் என்னவென்றால், அந்தப் பகுதியில் உள்ள மற்ற கதவுகளைப் பற்றி நான் அந்த அமைப்பிடம் கேட்டபோது, ​​புகார் வந்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்கள், என்று மிராண்டா கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?