காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல் NewsSense
உலகம்

காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல்

இதை வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் சதிக்கோட்பாட்டு இணைய தளங்கள் அடிக்கடி பகிர்ந்து வருகின்றன. நடக்க முடியாத இந்த விசயம் எப்படி நடந்தது என அந்தத் தளங்கள் பல விடைகளை முன்வைக்கின்றன.

Govind

போலிச் செய்திகள் நமக்கு புதிது. இணையம், சமூக ஊடகங்கள் வளர்ந்த பிறகு இந்தியாவில் ஃபேக் நியூஸ் பரவுவதோடு அதை உண்மையறியும் இணைய தளங்களும் நிறைய இருக்கின்றன. உண்மையைச் சொல்வதற்கே இங்கு ஒரு மார்கெட் உள்ள அளவுக்கு போலிச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன

டைம் ட்ராவல்

அமெரிக்காவின் கதை வேறு. அங்கே இணைய வளர்ச்சிக்கு முன்பேயே அமானுஷ்ய சக்திகள், மர்மங்கள், வேற்றுக்கிரகவாசிகள், பேய்கள், டைம் டிராவல் எனப்படும் காலப்பயணம், தேஜா வூ போன்ற கதைகள் பல ஆண்டுகளாக மக்களிடையே பேசப்படுகின்றன.

அதில் ஒன்று பான் அமெரிக்கா விமானம் 914 (Pan Am Flight 914) இன் விசித்தரமான கதை. இக்கதையின் படி 1955 இல் நியூயார்க்கில் 57 பயணிகளுடன் புறப்பட்டு காணாமல் போய் 37 வருடங்களுக்கு பிறகு திடீரென்று அவ்விமானம் மியாமியில் தரையிறங்கியதாம்.

இதை வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் சதிக்கோட்பாட்டு இணைய தளங்கள் அடிக்கடி பகிர்ந்து வருகின்றன. நடக்க முடியாத இந்த விசயம் எப்படி நடந்தது என அந்தத் தளங்கள் பல விடைகளை முன்வைக்கின்றன.

அவற்றில் மிகவும் பிரபலமானது அந்த விமானம் ஒருவகையான காலப் பயணம் செய்து (time-travel portal) தரையிறங்கியதாம்.

போலிச் செய்திகள்

இன்றைக்கு போலிச்செய்திகளை பரப்பும் புரவலர்களைப் போல வீக்லி வோர்ல்ட் நியூஸ் தனது பொய்ச் செய்திகளுக்கு தொடர்பில்லாத புகைப்படங்களை பயன்படுத்துகிறது. இந்த இதழ் காணாமல் போன விமானம் என்று பான் அமெரிக்கா 914 விமானத்தை படமாக காட்டாமல், டிசி 4 எனும் விமானத்தைக் காட்டுகிறது.

மற்றபடி இந்த இதழின் ஆவணக் காப்பகத்தில் காணாமல் போன இந்த விமானத்தைப் பற்றி காணாமல் போன காலத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை கூட இல்லை. மேலும் இந்த விமானம் அப்படி காணாமல் போனதாக எங்கேயும் எந்த செய்தியும் இல்லை.

Twilight Zone எனும் அறிவியல் புனைகதை தொலைக்காட்சி தொடரின் ரசிகர்கள் இந்த விமானக் கதையை படித்தால் ஒரு தேஜா வூ அனுபவத்தை பெறுவார்கள். தேஜா வூ என்பது நடப்பதை முன்கூட்டியே கனவு காண்பது.

பான் அமெரிக்கா விமானம் 914 இன் கற்பனைக் கதையானது முழுக்க முழுக்க வீக்லி வோர்ல்ட் நியூஸ் இதழில் உருவான ஒன்று. அதுவும் ஒரிஜனல் இல்லை. “தி ஒடிஸி ஆஃப் ஃபிளைட் 33” எனும் அறிவியல் புனைகதை நிகழ்ச்சி 1961 இல் வெளியானது. அதனுடைய காப்பிதான் வீக்லி வோர்ல்ட் நியூஸின் இந்த 37 ஆண்டு காணாமல் போன விமானத்தின் மர்மக் கதை.

அமெரிக்கா என்றால் அப்பாடர்கள் என்று நினைப்பவர்களுக்கு இந்தக் கதை கொஞ்சம் வெட்கத்தை வரவழைக்கலாம். அவ்வளவுதான்.

உண்மை அல்ல

ஆனால் உண்மை என்னமோ மிகவும் மலிவானது. பான் அமெரிக்கா 914 விமானத்தின் இந்த விசித்திரக் கதை ஒரு கற்பனையான கதையாகும். அப்படி உண்மையில் எதுவும் நடைபெறவில்லை. 1979 மற்றும் 2007 க்கும் இடையில் இயங்கிய ஒரு மோசமான பத்திரிகையான வீக்லி வோர்ல்ட் நியூஸ் மூலம் புனையப்பட்ட முட்டாள்தனமான கதையாகும். இந்த பத்திரிகை தற்போது அச்சில் இல்லாமல் இணையதளத்தில் மட்டும் வெளிவருகிறது.

ஜூன் 2019 இல் பிரைட் சைட் எனும் யூடியூப் சானல் இது தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டது.வைரலான அந்த வீடியோ 50 இலட்சம் பார்வைகளைப் பெற்றது இந்த மர்மக் கதையின் ஆர்வத்தை புதுப்பித்தது.

இந்த ஒன்பது நிமிட வீடியோவின் முதல் ஏழு நிமிடங்கள் விமானத்தின் மர்மக் கதையை விவரிக்கிறது. ஏழாவது நிமிடம் இது புனைகதையாக இருக்கலாம் என்று பிரைட் சைட் குறிப்பிடுகிறது. ஆனால் பார்வையாளர்கள் முழு வீடியோவையும் பார்க்காமல் மர்மக் கதை பகுதியை மட்டும் பார்த்து விட்டு அதை உலக அதிசயமாக விவாதிக்கிறார்கள். கேள்வி எழுப்புகிறார்கள்.

பான் அமெரிக்கா விமானம் 914 இன் கதை 1955 இல் நியூயார்க் விமானத்தில் துவங்கவில்லை. இது உண்மையில் மூன்று பத்தாண்டுகளுக்கு பிறகு வீக்லி வோர்ல்ட் நியூஸில் வெளியான ஒரு கட்டுரையுடன் துவங்குகிறது.

வீக்லி வோர்ல்ட் நியூஸ் பத்திரிகை இத்தகைய கற்பனை, பொய்யான கதைகளை வெளியிடுவதில் மலிவாக நடந்து கொள்ளுகிறது. பங்கு சந்தை வர்த்தகத்தின் உள் வர்த்தகச் செய்திகளை டைம் டிராவல் செய்து அறிந்து கொண்ட ஒரு மனிதன் கதை என்றெல்லாம் செய்தி வெளியிடும். இந்த பத்திரிகைக்கு அங்கே உண்மைச் செய்திகளை வெளியிடும் என்று எந்த மரியாதையும் இல்லை.

மேற்கண்ட விமானக் கதையை இந்தப் பத்திரிகை 1993 மற்றும் 1999 என இருமுறை வெளியிட்டிருக்கிறது. இரண்டு பதிவுகளிலும் இரண்டு வேறுபட்ட புகைப்படங்களில் இரண்டு வேறுபட்ட நபர்களை வெளியிட்டிருக்கிறது. அந்த விமானம் காணாமல் போய் பல ஆண்டுகளுக்கு பிறகு தறையிறங்கியதற்கு சாட்சியாக விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் ஜூவான் டி லா கோர்டேவை இரண்டு வேறு பட்ட நபர்களாக காட்டுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?