ஒரு நாட்டின் வளர்ச்சியும் செழிப்பும் அங்குள்ள மக்களின் கல்வி சதவிகிதம், பொருளாதாரத்தை பொறுத்து மாறுபடுகிறது. பொருளாதாரம் சீராக அமைய அடிப்படையாக தேவைப்படுவது வேலை.
மொத்த தொழிலாளர்களில் வேலையில்லாமல் இருப்பவர்கள் எண்ணிக்கையை வைத்து ஒரு தேசத்தின் வேலையில்லா திண்டாட்டத்தை கணக்கிடுகின்றனர்
உலக மக்கள் தொகை ஆய்வறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டு உலகளவில் வேலையின்மையின் சதவிகிதம் 6.3 முதல் 6.5 ஆக இருந்தது. இதற்கு ஒரு முக்கிய காரணம் கொரோனா பெருந்தொற்று.
தற்போது இந்த சதவிகிதம் 5.3க்கு குறைந்துவிட்டாலும் குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள் மீண்டு வரும் முயற்சியில் இன்னும் வெகு தூரம் பின் தங்கியிருப்பதாகவே கூறியுள்ளது சர்வதேச தொழிலாளர் அமைப்பு.
இந்நிலையில், உலகளவில் வேலையின்மையால் அவதிப்படும் ஐந்து நாடுகள் என்னேன்ன? அதில் இந்தியாவிற்கு இடமிருக்கிறதா?
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வேலையின்மை 33.3 சதவிகிதம் உள்ளது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் 41 சதவிகிதமாக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு தனியார் துறையின் வரையறுக்கப்பட்ட முதலீடு, குறைந்த தொழில்மயமாக்கல், தேவையான பொருளாதார வளர்ச்சியை விட மெதுவான வளர்ச்சி போன்றவை காரணமாக இருக்கிறது
ஏப்ரல் 2023ன் அறிக்கையின்படி, ஜி20 நாடுகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் வேலையின்மை சதவிகிதம் 34.7ஆக இருந்தது.
தற்போது அது சற்றே குறைந்து 32.9 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துவரும் தென் ஆப்பிரிக்காவில் ஆற்றல் குறைபாடும் ஏற்பட்டுள்ளது
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது பாஸ்னியா நாடு. இங்கு வேலையின்மை சதவிகிதம் 29.03 சதவிகிதமாக இருக்கிறது
ஈராக்கின் வேலையின்மை சதவிகிதம் 15.55 ஆக இருக்கிறது. அபரிமிதமான இயற்கை வளங்களை கொண்டுள்ள நாடு, எண்ணெய் உற்பத்தியாளர் நாடுகள் பட்டியலில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நாட்டில் வேலையின்மை கவலையளிப்பதாக இருக்கிறது.
விவசாயம், உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கியமான தொழில்களில் முதலீடு இல்லாதது ஈராக்கின் அதிக வேலையின்மை விகிதத்திற்கு பங்களிக்கும் காரணியாக இருக்கிறது
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் இருக்கிறது. இங்கு வேலையின்மை சதவிகிதம் 13.3 சதவிகிதமாக இருக்கிறது.
டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இந்தியா 7.7 வேலையின்மை சதவிகிதத்துடன் 17வது இடத்தில் இருக்கிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust