சாங்கி முதல் ஹாங் காங் வரை: உலகின் மிக அழகான 7 விமான நிலையங்கள் Twitter
உலகம்

Travel: சாங்கி முதல் ஹாங் காங் வரை - உலகின் மிக அழகான 7 விமான நிலையங்கள்

சில சமயங்களில், விமான நிலையங்கள் கூட நம்மை அதன் பிரம்மிப்பான தோற்றத்தால் வியக்க வைக்கலாம், மனதை கவரலாம். அந்த வகையில், உலகளவில் மிகவும் பிரபலமான, நிச்சயம் பார்க்கவேண்டிய அழகிய விமான நிலையங்களின் தொகுப்பு தான் இந்த கட்டுரை

Keerthanaa R

சுற்றுலா என்பது, புதிய இடங்களை தேடி சென்று அதன் வனப்பில் மெய்மறப்பது மட்டுமல்ல! நாம் எப்படி செல்கிறோம், நமது பயணம் எப்படி அமைகிறது என்பதும் தான்.

சில சமயங்களில், விமான நிலையங்கள் கூட நம்மை அதன் பிரம்மிப்பான தோற்றத்தால் வியக்க வைக்கலாம், மனதை கவரலாம். அந்த வகையில், உலகளவில் மிகவும் பிரபலமான, நிச்சயம் பார்க்கவேண்டிய அழகிய விமான நிலையங்களின் தொகுப்பு தான் இந்த கட்டுரை

சாங்கி விமான நிலையம்:

சிங்கப்பூரில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தை ஒரு மினி நகரம் என அழைக்கின்றனர். பூக்கள், சிறு சிறு மரங்கள் நிறைந்து பச்சை பசேல் என்று காணப்படும் இந்த விமான நிலையத்தில், ஆர்ட் கேலரி, நீச்சல் குளம், கடைகள் என அனைத்தும் இருக்கிறது. ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களுள் இதுவும் ஒன்று.

பெய்ஜிங் டாக்சிங் சர்வதேச விமான நிலையம்:

இந்த விமான நிலையம், நட்சத்திர மீன் விமான நிலையம் என்று பிரபலமாக அறியப்படுகிறது. 2019ல் தொடங்கப்பட்ட இந்த விமான நிலையம், பார்ப்பதற்கு நட்சத்திர மீனின் வடிவத்தில் இருப்பதனால் இந்த பெயரை பெற்றது. இது உலகின் மிகப் பெரிய விமான நிலையமும் கூட.

ஹாங் காங் இண்டெர்னேஷனல் ஏர்போர்ட்:

உலகின் அழகான, பிசியான விமான நிலையங்களில் ஒன்று ஹாங் காங் விமான நிலையம். புத்தக நிலையங்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் என எண்ணிலடங்கா வசதிகள் இந்த விமான நிலையம் கொண்டுள்ளது.

ஹேடர் அலியேவ் சர்வதேச விமான நிலையம், அசெர்பைஜன்:

இந்த விமான நிலையத்தின் கட்டுமானம் தான் இதன் சிறப்பே. அழகிய ஜியாமெட்ரிக்கல் வடிவங்களால் இது கட்டப்பட்டுள்ளது பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறது

ஹமத் இண்டெர்னேஷனல் ஏர்போர்ட்:

சுத்தத்தின் எடுத்துக்காட்டாக இருக்கிறது ஹமத் விமான நிலையம். இங்கு உணவகங்கள், பொட்டீக்குகள் பிரபலம். மேலும் இதன் கட்டுமானம், உலகத் தர வசதிகள் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

டென்வர் விமான நிலையம், கொலராடோ:

இந்த விமான நிலையம் உட்புற மற்றும் வெளிப்புற கட்டமைப்புகளுக்காக பெயர் பெற்றது. மேலும், இங்கு பிரபலமான கண்கவர் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

துபாய் சர்வதேச விமான நிலையம்:

உலகின் மிக ஆரவாரமான விமான நிலையங்களுள் ஒன்று துபாய் ஏர்போர்ட். உலகின் மிக வசதியான விமான நிலையமும் கூட. ஊசி முதல் பீட்சா வரை, இங்கு கிடைக்காத பொருளே இல்லை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?