Travel: இலங்கை டு துபாய் - துரிதமாக அடையக்கூடிய 5 ஆசிய நாடுகள் canva
உலகம்

Travel: இலங்கை டு துபாய் - வேகமாக அடையக்கூடிய 5 ஆசிய நாடுகள்

இந்தியாவிலிருந்து மிக விரைவாக, அதிக நேரம் செலவிடாமல் நாம் பயணிக்கக்கூடிய சில நாடுகள் உள்ளன. அந்த பட்டியலை இங்கு காணலாம்

Keerthanaa R

பயணங்கள் மேற்கொள்வது எல்லோருக்கும் பிடித்தமானது. நெடுந்தூரம் பயணித்து அரிதான, அதிசயங்கள் நிறைந்த இடங்களை பார்ப்பவர்கள் ஏராளம்.

அதிக நேரம் பயணிக்காமல், நாம் பார்க்கவேண்டிய சில அழகான இடங்கள் இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கின்றன. இந்த நாடுகள் அதன் பாரம்பரியத்துக்காகவும், வனப்புக்காகவும் அறியப்படுகின்றன.

அந்த வகையில், இந்தியாவிலிருந்து மிக விரைவாக, அதிக நேரம் செலவிடாமல் நாம் பயணிக்கக்கூடிய சில நாடுகள் உள்ளன. அந்த பட்டியலை இங்கு காணலாம்

இலங்கை

வரைப்படத்தில் பார்த்தால் இந்தியாவுக்கு கீழே அமைந்திருக்கும் இந்த தீவு தேசம். வான்வழி பயணமல்லாது இலங்கைக்கு கடல்வழிப்பயணமும் மேற்கொள்ளலாம்.

இந்தியாவிலிருந்து இலங்கையின் தலைநகர் கொழும்புவிற்கு 3 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.

இலங்கையில் கடல்கள், வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள் புத்த விகாரங்கள் உள்ளன

நேபாளம்

இந்தியாவிலிருந்து (டெல்லி) வெறும் 2 மணி நேரத்தில் நேபாளத்தை அடைந்துவிடலாம். புத்தரின் பிறப்பிடமான நேபாளத்தில் தான் எவரஸ்ட் சிகரம் அமைந்திருக்கிறது. இங்கு தேசிய வனவிலங்கு பூங்காக்கள் ஏராளம், மற்றும் யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களும் அமைந்திருக்கின்றன

மலேசியா

மலேசியா என்றதும் நம் நினைவுக்கு வருவது அழகிய கடல்கள், கிட்ட தட்ட 140 அடி உயரம் கொண்ட முருகன் சிலை. இந்தியாவிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 5.30 மணிநேரம் தான்.

மலேசியா அதன் ஸ்ட்ரீட் ஃபுட்களுக்கு ஃபேமஸ்

தாய்லாந்து

இந்தியாவிலிருந்து 4 மணிநேரத்தில் தாய்லாந்தை அடைந்துவிடலாம். கடற்கரைகள் நிறந்த இந்நாட்டில், நைட் லைஃப் மிகவும் பிரபலம். தவிர புத்தர் கோவில்கள், கோட்டைகளும் இங்கு இருக்கின்றன.

தாய் என்ற வார்த்தைக்கு அர்த்தம் “free" என்பதாகும். ஐரோப்பிய நாடுகளால் கைப்பற்றப்படாத நாடான தாய்லாந்தில் மாம்பழங்கள் ஃபேம்ஸ்

துபாய்

உலக பணக்காரர்கள் அதிகம் விரும்பும் நாடு துபாய். இந்த அரபு தேசத்திற்குள் நுழைந்தால் வேறு உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுமாம். இந்தியாவிலிருந்து 3 மணி நேரம் 35 நிமிடங்களில் துபாயை அடைந்துவிடலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?